பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

900 பொது உரைநடை விளுவிடை 11. சிறு தொழில்களைப் பொறுத்தவரை நாம் செய்ய வேண்டுவதென்ன ? நாம் செய்ய வேண்டுவதெல்லாம் தொழிலில் - இந்த வகைப் பட்ட தொழிலில் முன்னேறியுள்ள நாடுகளின் உதவி பெற்று அத் தொழில் முறைகளை அப்படியே பின்பற்ற வேண்டியதுதான் சிறு தொழில்களை ஏற்படுத்துவதில் நாம் பிரிட்டனைப் பின்பற்றலாம். ஜப்பானைப் பின்பற்றலாம். 12. ஜப்பானின் சிறு தொழில் ஆற்றலை வரைக. ஒரு பூகம்பத்தில் பல தொழிற்சாலைகள் மண்ணுக்குள் புதைத் தாலும், ஜப்பானுக்கு அவைகளை மீண்டும் நிலைநாட்ட ஒரிரு மாதங்களே போதும். ஜப்பானிய முறை இதில் மிகவும் மேலானது. பல ஆண்டுகள் முயன்று உலகில் மற்ற நாடுகள் சாதிக்கும் தொழில் வளத்தினை ஜப்பான் அப்படியே பிரதிப் படுத்தி ஒர் ஆண்டிலேயே நடைமுறைக்குக் கொண்டு வந்து விடும். அமெரிக் கர் பத்து ஆண்டுகள் முயன்று ஓர் இயந்திரமோ கருவியோ கண்டு பிடித்திருப்பர். அதை அடுத்த ஆண்டிலேயே ஜப்பான் பல ஆயிரக் கணக்கில் உற்பத்தி செய்வதையும், அமெரிக்கர்களுடன் போட்டியிட்டு உலகச் சந்தையில் அதைச் சில சமயம் அமெரிக்கர் விலைக்குப் பாதியினும் குறைவாக விற்கும். 13. சிறு தொழில் செழிப்பதற்கு வேண்டிய சாதனங்கள் யாவை ? சிறு தொழில்கள் செழிப்பதற்கு வேண்டிய சாதனங்கள் வருமாறு : (1) நீடித்து நிலைக்கும் விற்பனே. (2) மிகக் குறைந்த விலையில் மூலப்பொருள்கள் பெறு வதற்குரிய வழிகள். (3) தொழில் நடத்தும் முறை. (4) தொழிற் பாதுகாப்பு. 14. பொதுவாக மக்கள் வாழ்க்கைத் தரத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை எவை? பொதுவாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை இரண்டாகக் கூறலாம். ஒன்று உடலில் உயிர் நிலைத்து வாழ்வதற்கான தேவை மட்டும். இரண்டாவதோ உலகத்தோடு ஒட்ட வாழ வாழும் நாகரிக வாழ்வு. உண்பது உடுப்பதுடன் படிப்பதும் பழகுவதும். 15. நிறைந்த அளவில் மக்களுக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் எவை? சிறு விவசாயக் கருவிகள் உற்பத்திச்சாலை, உர உற்பத்திச் சாலை, நீர் இறைக்கும் கருவிகள் உற்பத்திச்சாலை, உடைக்கான