பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பொது உரைநடை விணுவிடை பாதிரியாரை நோக்கி நீர் திருவள்ளுவரைவிடப் புத்திசாலியாகி விட்டீரோ? குறளைத் திருத்த வேண்டுமென்ற இந்த ஞானம் உமக்கு எப்படி ஏற்பட்டது? திருக்குறள் எப்படிப்பட்ட நூல்! உம்முடைய கையில் சிக்கிச் சீர்குலையவா அதைத் திருவள்ளுவர் இயற்றினர். எச்சமென்பதும் மக்களென்பதும் ஒன்ருகுமா? இந்த வித்தியாசம் தெரியாதவருக்குக் குறளைக் கையிலே தொடுவ தற்குக் கூட யோக்கியதை இல்லையே! இந்த மாபாதகச் செயலைச் செய்தவர் முகத்தில் விழிப்பதே ப்ாவம்' என்று சொல்லிக் கொண்டே போய்க் கதவை அடைத்துக் கொண்டார். 4. பாதிரியார் தியாகராசச் செட்டியாரிடம் வரக் காரணம் என்ன ? பாதிரியார் மதுரையில் ஒரு தமிழ்ப் புலவரிடம் தன்னுரலையும் யாப்பிலக்கணத்தையும் கற்றுக் கொண்டார். யாப்பிலக்கணித் தின்படியே திருக்குறள் இருக்கிறதா என்று சோதித்துத் தக்கார் தகவிலார்' என்ற குறளைத் திருத்தித் தமிழ்ப் புலவரிடம் காட்டி ர்ை. அவர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடி, நீங்கள் திருத்தியிருப்பது நன்ருக இருக்கிறது. ஆன லும் இப்படிப்பட்ட செயல்களில் பெரும் புலவ்ர்களுட்ைப ஒப்பு தலையும் பெறுவது நல்லது என்று கூறித் தப்பித்துக் கொண்டார். பாதிரியார் யார் பெரும் புலவர் என்று விசாரித்தறிந்ததில் செட்டி யாரவர்கள் என அறிந்து அவரிடம் திருத்தத்தைக் காண்பிக்க வந்தார். 5. துரையவர்களை இப்படி அவமதிக்கலாமா? என்று கேட்டவர்கட்குச் செட்டியார் கூறிய மறுமொழி யாது? இந்த மகானுபாவரை நான் தாம்பூலம் வைத்து அழைக்க வில்லையே குறளைத் திருத்தும் துணிவு படைத்த ஒருவருக்குத் தமிழ்_நாட்டில் மதிப்பு எவ்வாறு கிடைக்கும் இவர் திருவள்ளு வருக்கே அவமதிப்பை உண்டாக்குகிறவர். இவர் சக்கரவர்த்தி யாகத்தான் இருந்தாலென்ன என்று மறுமொழி கூறினர் செட்டியார். 10. பழந்தமிழ் காடும் நகரமும் 1. பழைய தமிழகத்தைப்பற்றிய செய்திகளைக் கூறும் நூல்கள் யாவை ? பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்னும் கடைச் சங்ககால இலத்தியம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள், தமிழகத்தைப் பற்றிய செய்திகளைக் கூறுவனவாம்.