பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பொது உரைகடை விவிைடை பண்டங்கள் பல குன்றுகளைப்போலக் காட்சியளித்தன என்று பட் டினப்பாலை அறிவிக்கிறது. 6. காவிரி புகும் பட்டினத்தில் இறக்குமதியாகும் பண்டங் கள் யாவை? அவை எங்கெங்கிருந்து வந்தன ? அரேபியாவிலிருந்து கப்பல்களில் குதிரைகளும், மேற்குக் கடற் கரைப் பகுதியிலிருந்து படகுகளில் மிளகுப் பொதிகளும், மேருவி விருந்து மாணிக்கமும், பொதிய மலையிலிருந்து சந்தனமரமும், பாண்டி நாட்டிலிருந்து முத்துக்களும், கீழ்க்கடற் பகுதியிலிருந்து பவளங்களும் வந்திறங்கின. ஈழ நாட்டிலிருந்து பனவெல்லம் முதலிய உணவுப் பொருள் களும், பர்மாவிலிருந்து சில மனப் பொருள்களும், சீன தேசத்தி, விருந்து கர்ப்பூரம் குங்குமம் முதலிய பொருள்களும் வந்திறங்கின. 7. உருத்திரங் கண்ணனுர் காவிரி புகும் பட்டினத்தில் வாழ்ந்த மக்கள் பகற் பொழுதிலும் இாவிலும் ஒய்வு நேரத்தை எவ்வாறு கழித்ததாகக் கூறியுள்ளார்? காவிரிபுகும் பட்டினத்தில் வாழ்ந்த மக்கள் நன்ருக உண்டு உடுத்து வாழ்ந்தவர்கள். சில வேளைகளில் ஊர் நடுவே கூடுவர். ஆட்டுக்கிடாயையும் சிவலென்னும் பறவையையும் முட்டவிட்டு விளையாட்டுப் பார்ப்பதை வழக்கமாகவுடையவர். இன்னும் சில வேளைகளில் களரியில் புகுந்து குத்துச் சண்டை வெட்டுச் சண்டை, கவண் எறிதல் முதலியவற்றில் ஈடுபடுவர்; பல வேளைகளில் கட லாடியும், புனல் படிந்தும், நண்டுகளைப் பிடித்து ஆட்டியும், அலை களோடு போட்டியிட்டும் பகலில் பொழுது போக்குவர். இரவில் பட்டாடைகளே நீக்கி மெல்லிய பருத்தியாடைகளே உடுப்பர் பாடல் கேட்பர் நாடகம் காண்பர்; வெண்ணிலாவின் பயனையும் துய்ப்பர் என்று உருத்திரங்கண்ணளுர் கூறுகிரு.ர். 8. நாடகம் நயந்தும் ஆடல் ஒர்ந்தும் பொழுது போக்கிய மக்களைப்பற்றி ஆசிரியர் குறிப்பன யாவை? நாடகம் நயந்தும் ஆடல் ஒர்ந்தும் இனிமையாகப் பொழுது போக்கினர் என்ருல் அம் மக்கள் மிக்க செல்வம் படைத்தவரா கவும், உழைத்து உழைத்து ஊதியம் திரட்டியவராகவும் இருந்த னர் என்பது சொல்லாமலே விளங்கும். அன்றியும் அவரெல்லாம் பகலிலே சாயுங்காலம் வரையும் பொழுதுபோன பின்னரும் தொழில் ஆற்றினவர். அவர்களிற் சிலர் பூவும் புகையும் விற்ற வர்கள், சிலர் வண்ணமும் சுண்னமும் விலை பகர்ந்தவர்கள்: சிலர் பட்டாலும் எலிமயிராலும் பருத்தி நூலாலும் ஆன ஆடைகளை நெய்து விலைக்கு விற்றவர்கள் ; ன்னும் சிலர் அவரை துவரை முதலிய தானியங்களை விற்று ஊதியம் தேடியவர்கள்; சிலர் பிட்டும் அப்பமும் விற்றவர்கள்; மீன் விற்றவரும் உப்பு விற்றவரும் உண்டு. வெண்கலக் கன்னரும், செம்புக் கொட்டிகளும், மர வேலை செய்_. தச்சரும், உழைத்துக் களைத்துப் போன கொல்லரும், நாடகம் .