பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ் நாடும் நகரமும் 211 தும் ஆடல் ஒர்ந்தும் வந்தார்களென்று அறிவதாக ஆசிரியர் குறிக் கின்ருர். 9. புகார்க் காண்டத்தால் காவிரி புகும் பட்டினத்தில் எவ்வெத் தொழிலாளர் வாழ்ந்ததாக அறிகிருேம்? உருக்குத் தட்டார், பணித் தட்டார், சிற்பாசிரியர்கள், சித் திரக்காரர்கள், தையற்காரர்கள், முதலியோர் விரும்பித் தொழில் புரிந்தனர். துணி, நெட்டி முதலியவற்ருல் பூ, வாடா மால், பொய்க் கொண்டை முதலிய பொருள்களை அமைக்கும் கைத் தொழில் வல்லவரும் காவிரி புகும் பட்டினத்தில் வாழ்ந்ததாகப் புகார்க் காண்டத்தால் அறிகிருேம். 10. காவிரி புகும் பட்டினத்தின் இரு பிரிவுகள் யாவை ? அங்கு வாழ்ந்தவர்கள் யார் ? காவிரிபுகும் பட்டினத்தின் கடற்கரைப்பக்கம் மருவூர்ப் பாக்கம் என ஒரு பிரிவாகவும், உட் பக்கம் பட்டினப் பாக்கம் என ஒரு பிரிவாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. மருவூர்ப் பாக்கத்தில் தொழிலாளர்களும், பட்டினப் பாக்கத் தில் அரசரும் செல்வரும் வாழ்ந்து வந்தனர். 11. மாங்குடி மருதனுர் மதுரை நகரத் தெருக்களைப்பற்றிக் கூறியுள்ள தென்ன ? - மதுரை, ஆறு கிடந்தாற் போன்ற அகன்ற தெருக்களையுடை யது. தெரு ஆறுபோலவும் இருபக்கத்து வீடுகள் ஆற்றின் கரை போலவும் அமைந்திருந்தன என்று மாங்குடி மருதனுர் கூறி புள்ளார். 12. மதுரையில் வாணிகம் நடந்து வந்ததைப்பற்றி மது ரைக் காஞ்சி கூறுவன யாவை? சிலர் அறுத்த சங்கின வளையல் முதலியனவாகக் கடைந்து தருவர்; சிலர் அழகிய மணிகளுக்குத் துளையிடுவர்; சிலர் பொன்ன உரைத்து மாற்றுக் காண்பர் சிலர் பொன் வேலை செய்வர். இவர் புடவை விற்பர் சிலர் அருமையான ஒவியம் வரைவர் சிலர் சிற் முடையும் பெரும் புடவைகளும் கொண்டு வந்து தத்தம் சிது வரோடு நான்கு தெருக்கள் கூடும் இடங்களில் கால் கடுக்க் நின்து விற்பர். பலாப்பழம், வாழைப்பழம், மாம்பழம், பாகற்காய், வழு துனங்காய், வாழைக்காய், கிழங்குகள், கீரை முதலானவற்றை விற்கும் பல இரவுக் கடைகளும் உண்டு என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது. .ே மதுரையில் அன்று தொழில் புரிந்தோரைப் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுவதை வரைக. சிலர் செம்பாலும் வெண்கலத்தாலும் பாத்திரங்கள் செய்வர். சிலர் ஆனக்கொம்பு முதலியவற்றைக் கடையும் தொழிலில் ஈடு படுவர் வண்டியும் தேர் வட்டையும், தேர்க்கொடிஞ்சியும் செப்