பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 18 பொது உரைகடை விளுவிடை வேண்டும். ஏழை எளியவர்களும் தம்மால் முடிந்ததை உதவி வேண்டும். இவ்வாறு வருவனவற்றைச் சிறிது சிறிதாகச் சேர்த்துப் பசிக் கொடுமை நீக்க முயல வேண்டும். 16. தமிழர் நலம் பேணிக் கவிபாடும் கவிஞர் கூறுவது யாது ? என் தமிழ் நாட்டில் எல்லோரும் கல்வி கற்றுப் பல கலைகளி லும் தேர்ச்சி பெற்று, வலிமையாலும் அன்பாலும் இமயமலை போல் புகழ் எய்தி இன்று மகிழ வேண்டும். அதை மற்ருேர் சொல்லக் கேட்கும் நாள் எந்த நாளோ என்று கூறுகிரு.ர். 12. சோழ நாட்டுத் துறைகள் 1. காவிரி எங்கே பிறந்து எங்கே நடந்து எங்கே செல்கின்றது ? காவிரியாறு குடகு மலையிலே பிறந்து, மைசூரிலே தவழ்ந்து, சோழ நாட்டிலே நடந்து, குணகடலிற் கலக்கின்றது. 2. காவிரி நடந்து செல்லும் அழகைச் சிலம்பு எவ்வாறு பாடுகிறது ? உழவர் ஒதையும், மதகுகளில் பாயும் நீரின் ஒதையும், விழா வெடுப்போர் எழுப்பும் ஒதையும் சிறந்து விளங்கக் காவிரி நடந்து செல்கிறது என்று சிலம்பு பாடுகிறது. 3. காவிரிக் கரையில் ஈசனுர்க்கு அமைந்த துறைகள் யாவை ? தேவாரப் பாடல் பெற்ற பாலைத் துறையும், பராய்த்துறையும், கடம்பந்துறையும், குரங்காடு துறையும், மாந்துறையும், மயிலாடு துறையும் முதலிய துறைகள் காவிரிக்கரையில் ஈசனுர்க்கு அமைந்த துறைகளாகும். கி. மயிலாடு துறையில் காவிரி களிநடம் புரிவதை ஞான சம்பந்தர் எவ்வாறு பாடுகிருர் 1 அங்குக் காவிரி களிநடம் புரிவதைக் கண்ட ஞான சம்பந்தர் * கத்தமலி சந்தினெடுகாரகிலும் வாரிவரு காவிரி என்று சந்தத் தமிழாற் பாடுகிரு.ர். | 5. திருமால் திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் கோலத்தைத் தொண்டரடிப் பொடியாழ்வார் எவ் வாறு பாடுகிருர் ? கங்கையினும் புனிதமாகிய காவிரியின் நடுவிலே, பொங்கி வரும் அலைகள் பாயும் சோலையின் நடுவிலமைந்த அரங்கத்தில் எங்கள் தலைவனகிய திருமால் பள்ளி கொண்டிருக்கும் காட்சியைக்