பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o முற்காலச் செய்யுள் - - _மயிர் யாக்கை-கருநிறம் பொருந்திய மயிரினையுடைய _ம்பையும், குடா அடி - வளைந்த அடியினை யும் உடைய, உளியம் - கரடி, பெருகல் விடர் அளை செறிய - பெரிய கல் பிளந்த பிளவு களிலே நுழைய, கரும் கோடு - கரிய கொம்புகளை உடைய, ஆமா நல் ஏறு_ சிலைப்ப - காட் டுப் பசுவின் காளைகள் முழங்க, சேண் நின்று - ம லை யு'ச் சி யி விருந்து, இழுமென இழி தரும்-இழுமென் னும் ஒசையுண்டாக, இறங்சி வரும, அருவி- ಶ್ಗ உடைய, பழம் முதிர் சோலை - பழம் - றின ::*. முதி மலே கிழவோன்-மலைக்கு உரிமை உடையவன். துடங்கிச் சுமந்து, உருட்டி, கிண்டு, சிதைய, கலாவ, உதிர, பனிப்பு விசிதழிஇ தத்துற்று கொழியா, துமிய உதிரத் தாக்கி, சாய, இரிய, செறிய, சிலப்ப இழிதரும் அருவி எண்முடிக்க. கருத்து துதிற் கொடியைப்போல அசைந்து, அகில் சந்தனம் முதலிய மரங்களே உருட்டிக்கொண்டு, சிறு மூங்கிலின் வேரைப் பிளந்து, தேன்கூட்டைச் சிதைத்து, ஆசினிப் ப்லாச்சுளைகளைக் கவர்ந்து ர்ே புன்னே மலர்கள் உதிரும்படி கருங்குரங்குகள் நடுங்க, பெண்யான்ை கள் குளிரும்படி வீசி, யானைத் தந்தங்களை வாரிக்கொண்டு, பொன் இம் மணியும் கொழித்து, வாழை முறியவும் இளநீர்க் குலைகள் உதிரலும் தாக்கி, மிளகுக் கொடிகள் சாய, மயிலும் கோழியும் அஞ்சியோட ஆண் பன்றியும் கரடியும் குகைளில் நுழைய, காட்டுக் காளேகள் முழங்க மலேயுச்சியிலிருந்து இறங்கி வரும் அருவிகளை யுடைய பழமுதிர் சோலைக்கு உரியவன். (அம்முருகன்). விளக்கம் ஆருவிக் காட்சி உயிரோவியமாகப் படைக்கப்ட்டிருக்கிறது. அருவி வரும் வேகத்தில் மரங்கள் சாய்தலும், மலர்கள் உதிர்தலும், விலங்கினங்களும் பறவைகளும் அஞ்சி இடுதலும் நிழற் படத்தில் காண்பதுபோல் நம் கண்முன் தோன்றுகின்றன. இலக்கணம் துகிலின்-இன் ஒப்புப் பொருளில் வந்தது. ஆலங்கு சினை-வினைத்தொகை. வேர் தீண்டு-இரண்டாம் வேற்றுமைத் தொகை, பரிதியின் தொடுத்த-இன் ஒப்புப்ப்ொருள். மீமிசை-ஒரு பொருட் பன்மொழி. இதனை மீமிசைக்கிளவி քրոմ"ԼIIT - பொன்மணி-உம்மைத் தொகை, கொழியா-செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் (கொழித்து)