பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை 229 _இ, வெளிஇ-தழுவி, வெருவி என்னுஞ் இசாற்கள் திரிந்து அளபெடுத் தமையால் சொல்லிசை அளபெடைகள். _மயிர்-இன்னிசை யளபெடை. ஈ. மணிமேகலை ஆதிரை பிச்சையிட்ட காதை, மணிமேகலை ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. ஐம்பெருங் காப்பியங்களாவன : 1. மணிமேகலை, 2. சிலப்பதிகாரம், 3. சீவக. சிந்தாமணி, 4. வளையாபதி, 5. குண்டலகேசி என்பனவாம். இவற் றுள் பின்னைய இரண்டும் முழுமையாகக் கிடைக்கவில்லை. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் மணிமேகலை. அவளுடைய வரலாற்றைக் கூறும் நூலாதலின் மணிமேகலை என் னும் பெயர் பெற்றது. இதற்கு மணிமேகலை துறவு என மற் ருெரு பெயரும் உண்டு. - நூல் முழுதும் ஆசிரியப்பாவாலாகிய முப்பது காதைகளைக் கொண்டது. இந் நூல் பண்டைய பழக்க வழக்கங்களையும் மதக் கொள்கை களையும் கூறுகிறது. பெளத்த சமயக் கொள்கைகளே மிகுதியும் காணப்படும். இது சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய காப்பியமாகும். மணிம்ேகலையின் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர். ஆசிரியரைப்பற்றி: சாத்தனர் என்பது இயற்பெயர். மதுரையில் அறுவகைக் கலங்களையும் வைத்துவானிகம் செய்து வந்தமையால் மதுரைக் கலவாணிகன் என்ற அடைமொழி வழங்கப்பட்டது. சீத்தலே என்னும் ஊரினர். அதனல் சீத்தலைச் சாத்தனர் என அழைக்கப் பட்ட்ார். இவர் கடைச்சங்கப் புலவருள் ஒருவராகக் குறிப்பிடப் படுகின்ருர், சேரன் செங்குட்டுவனுக்குக் கண்ணகியின் வரலாற்றைக் கூறியவர் இவரே. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதக் கர்ரனராக இருந்தவிரும் இவரே. இவரைத் தண்டமிழாசான்' எனவும் நன்னுாற்புலவன் எனவும் சிறப்பித்துக் கூறுவர் இளங் கோவடிகள். இவர் பாடியனவாக நற்றினை, குறுந்தொகை அக நானுா ஆகிய சங்க நூல்களுள் சில பாடல்கள் வந்துள்ளன, இவருடைய சமயம் பெளத்தம், காலம் கி. பி. இரண்டாம் நூற்ருண்டு.