பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதம் 257 தாயாததிையர்க்கும் நடந்த போர் நிகழ்ச்சிகளைக் கூறும் பகுதி பதினேழாம் போர்ச்சருக்கம் எனப்படும். பருவம்-பெரும் பிரிவு: சருக்கம்_சிறு பிரிவு. ஆசிரியரைப்பற்றி : பெயர் : வில்லிபுத்துாராழ்வார். ஊர் : நடுநாட்டிலுள்ள சனியூர். தந்தை வீரராகவாச்சாரியார். காலம் : கி. பி. பதினைந்தாம் நூற்ருண்டு என்பர். ஆதரித்தவன் : வரபதி ஆட்கொண்டான். பாடப்பகுதியின் கதைச் சுருக்கம் போர்க்களத்தில் அருச்சுனன் எய்த அம்புபட்டுக் கன்னன் உடம்பெல்லாம் குருதிசோர உருக்குலைந்து நிற்கின்ருன். அப் பொழுதும் அவன் கைகள் அம்பெய்த வண்ணமாக இருக்கின்றன. இதைக்கண்ட கண்ணன் அருச்சுனனைப் போரை நிறுத்தும்படி கூறிவிட்டு ஒரு மறையவன் வடிவங் கொண்டு கன்னனிடம் சென்ருன். சென்று அவனை நோக்கி நீ வேண்டுவார்க்கு வேண்டுவதை வாய் என்றறிந்து உன்பால் வந்தேன். என் வறுமையைப் போக்க நீ ஒன்று எனக்களிப்பாய்’ என்ருன். அதற்குக் கன்னன் உனக்கு வேண்டுவதைக் கேள் என்ருன். அதற்கு மறையவன் உன் புண் ணியம் அனைத்தையும் எனக்குக் கொடு என்ருன். அவ்வாறே கொள்க எனச்சொன்னன் கன்னன். மறையவன் நீர் வார்த்துத் தருக" என்று கூற, கன்னன் தன்னுடலிற்பட்டுள்ள அம்பைப் பிடுங்க, வழியும் இரத்தத்தால் தாரை வார்த்தான். பெற்ற வேதியன் உனக்கு வேண்டும் வரங்களைக் கேள் ; தருகிறேன் என்ருன். ஏழேழ் பிறப்பிலும் இல்லை என்னுது ஈயும் மனத்தை எனக்குக் கொடுத்தருள்வாயாக’ என்று கன்னன் வரம் வேண்ட, எத்தனை பிறவி எடுத்தாலும் ஈகையும் செல்வமும் பெறுவாயாக இறுதியில் முத்தியும் பெறுவாய் என வரம் அளித் தான் வேதியன். பிறகு வேதியன் வடிவம் மாறித் திருமால் உருவில் காட்சிதரக் கன்னன்கண்டு களித்துப் பலவாறு புகழ்ந்து பாராட்டி ன்ை. பிறகு கண்ணன், கவசகுண்டலம் வாங்கச்செய்ததும், குந்தியை அனுப்பியதும் முதலான செயல்களெல்லாம் நின் பொருட்டு நான் செய்தனவே என்று கூறிச் சென்ருன். 1. கண்ணன் வேதியணுகிக் கன்னனையடைதல் அத்தவெற்பு..............................அடைந்தான் சொற்பொருள் o அத்தவெற்பு - அத்தமன கிரி, ஆதபன் போய்-ஞாயிறுசென்று, இரண்டு விற்கிடை - இரண்டு சாய்தல் கண்டருளி - மேற்றிசை வில்லின் அளவு தூரம் உளது i யில் சாய்வதைப் பார்த்து, என்னும்படி, (op.–17