பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதம் 271 கருதது ருமாலே ' என் உயிர் போன்ற தோழன் பொருட்டுத் தம் 'பியரோடு பொருது செஞ்சோற்றுக் கடன் முடித்தேன்; இந்திர னுக்குக் கவச குண்டலங்களைக் கொடுத்தேன். உனக்கு என் புண் னியமெல்லாம் கொடுத்தேன். இவ்வளவு அரிய செயல்களைச் செய்து வாழ்ந்தது என் மாதவமேயாகும். இதனை என்னென்று சொல்வேன் எனக் கன்னன் இறும்பூது எய்துகிருன். விளக்கம் செஞ்சோற்றுக் கடன் - துரியோதனன் கன்னனை இன்னுன் என அறியாதிருந்தும் தன்னைச் சோறுாட்டி வளர்த்து நண்பனுகக் கொண்டு அங்க நாட்டுக்கு மன்னனுக்கினன். அவ்வாறு சோறுாட்டி வளர்த்தமைக்கு நன்றியுணர்வைக் காட்டவேண்டுவது கன்ன னுடைய கடமையாகும். அக்கடமை யுணர்வு'தவருது, பாண்டவர் தன் தம்பியர் என்றறிந்திருந்தும் தன் தோழன் பொருட்டாக அவ ரொடு பொருது செஞ்சோற்றுக் கடனைக் கழித்துக் கொண்டான். கன்னைேடு உடன்பிறந்த கவச குண்டலங்களை அவன் அணிந் திருந்தால் பகைவர் எவருமே அவனை வெல்ல முடியாது. இதை யுணர்ந்திருந்த கண்ணன் இந்திரனை அனுப்பித் தந்திரமாக அவற் றைப் பெற்று வருமாறு செய்தான். செஞ்சோற்றுக் கடன் கழித்தலும், உயிர் காக்கும் கவச குண் டலங்களைக் கொடுத்தலும், புண் ணியம் ஈதலும் பிறரால் செய்ய முடியாதவை மேலும் பெற்றவர்களோ இந்திரனும் திருமாலும் ஆவர். அதனுல் தன் வாழ்வை வியக்கின்ருன். கண்ணன் குழந்தைப் பருவத்தில் செய்த குறும்புச் செயல் களைத் தாங்க முடியாமல் யசோதை உரலில் கட்டிப் போட்டாள். குபேரன் மைந்தராகிய நளகூபரன், மணிக்கிரீவன் என்னும் இரு வரும் நாரதருடைய சாய்த்தால் இரு மரங்களாகி அங்கு நின்ற் னர். கண்ணன் உரலையும் இழுத்துக்கொண்டு தவழ்ந்து சென்று மருத மரங்களுக்கிடையில் நுழைந்தான். உரல் மரங்களுக்கிடை யில் சிக்கிக்கொண்டது. கண்ணன் உரலை வலியோடு இழுக்கவே மரமிரண்டும் முறிந்துவிடுகின்றன. அவ்விருவரும் சாபம் நீங்கப் பெற்று உண்மை உருவம் பெற்றுச் சென்றனர் என்பது கதை. இலக்கணம் தறுகண் ஆண்மை - உம்மைத்தொகை. கவசமும் குண்டலமும்-எண்ணும்மை. ஈந்தேன்-தன்மை ஒருமை வினைமுற்று. = ஈ-த்-த்--ஏன், ஈ-பகுதி, த்-சந்தி, நகரமானது விகா ரம், த்-இறந்தகால இடைநிலை, ஏன்-தன்மை ஒருமை வினைமுற்றுவிகுதி. -