பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27"び இடைக்காலச் செய்யுள் திருவிளையாடற் புராணம் ; மற்ருென்று திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். இங்குப்பாடமாக வந்துள்ளது திருவால் வாயுடையார் திருவிளையாடற் புராணமாகும். இதனை இயற்றிய ஆசிரியர் செல்லிநகர்ப் பெரும் பற்றப் புலி பூர் நம்பி என்பவராவர். இந்நூல் பழைய திருவிளையாடல் எனவும் வேம்பத்துாரார் திருவிளையாடல் எனவும் வழங்கும். ஆசிரியரைப் பற்றி : இந்நூலாசிரியராகிய பெரும் பற்றப் புலியூர் நம்பி பாண்டிய நாட்டிலுள்ள செல்லி நகரில் பிறந்தவர். இவர் பெயர் தில்லை நம்பி எனவும் வழங்கும். இந்நூல் இயற்றக் காரணமாக இருந்த பாண்டியன் ஒருவன் இவருக்குப் பல்லக்கு முதலிய விருதுகளையும், மணிமாலைகளை யும் கொடுத்தான் என்பர். இவருடைய ஞான சிரியர் வியைகர் என்பவர் ஆவர். பாடப்பகுதியின் சுருக்கம் ஒரு சமயம் இறையருைடைய அகப் பொருள் சூத்திரங்களுக்கு சங்கப்புலவர் பலரும் உரை எழுதித் தத்தம் உரையே சிறந்த தெனக் கூறித் தம்முள் மாறுபட்டனர். பின்னர் அவர்கள் ஒன்று கூடி இறைவன் திருமுன்பு நம் உரையனைத்தையும் சொல்வோம். அவன் எதை நல்லதென்று சொல்கிருனே அதையே நாமும் ஏற் போம் என்று முடிவு செய்து கோவிலுக்குச் சென்று முறையிட் டனர். அப்போது இறைவன் ஊமனும், பாலனும், உப்பூர்குடி கிழான் மகனும் ஆகிய உருத்திர சன்மன் என்பவன் ஒருவன் உளான் அவனிடம் சென்று கேளுங்கள் என்று ஆணையிட்டனன். புலவர்கள் ஊமையாக உள்ளவன் எவ்வாறு சொல்ல வல்லான் என ஐயுற்றனர். அதையறிந்த இறைவன் நீங்கள் உங்கள் உரை யைப்படிக்குங் காலத்தில், சிறந்த உரையைக் கேட்டால் அவனுக்கு உடல் புளகம் எய்தும், கண்ணிர் சிந்தும். அதுகொண்டு துணிந்து கொள்க என்றனன். பிறகு புலவர்கள் இறைவன் ஆணேப்படி உருத்திர சன்மனை அழைத்து வந்து சிங்காதனத்து இருத்தி வணங்கித் தம் உரைகளை உரைத்தார். அப்பொழுது நக்கீரன், கபிலன் பரணன் என்னும் இம்மூவருடைய உரையைக் கேட்ட அந்த ஊமைப்பிள்ளை மெய்ம் மயிர் சிலிர்த்து, கண்ணிர் சோர இருந்தது. அது கண்ட புலவர் வியந்தனர். பிறகு அவ்வூமைப் பிள்ளை மயில் மீதேறும் அறுமுகப் பெருமானுகக் காட்சி தந்து மறைந்தருளியது. ஊமைப்பிள்ளை தமிழறிவு நிறைந்ததாய்ப் புலவர்கள்தம் உரைகளையும் கேட்டறிந்து எது சிறந்தது என்று ஆய்ந்து காணும் அறிவுடையதாய் விளங்கிய பகுதியைக் கூறும் பகுதி உன்மை தமிழ றிந்த திருவிளையாடலாகும்.