பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+- - - - 296 தற்காலச் செய்யுள் வையாகவும் மாறி ஒன்றை யொன்றிழுக்க அதனைக் கண்ட் நக்கீரர் சிவ வழிபாட்டில் வழுவி.வியந்து நின்ருர். அப்பொழுது ஆண்டுக் கொரு நாள் ஆயிரம் பேரை யுண்ணும் பூதம் 999 பேரைப் பிடித்து அடைத்து வைத்து விட்டு இன்னும் ஒருவருக்காக எதிர் பார்த்துக் கொண்டிருக்கையில் இவரைக் கண்டு பிடித்துக் குகையில் அடைத்துவிட்டு நீராடச் சென்றது. அப்பொழுது நக் கீரர் திருமுருகாற்றுப் படையைப் பாட முருகன் வந்து பூதத் தைக் கொன்று அவரை விடுவித்துப் பொன் முகலியாற்றில் நீராடச் செய்து பின் மறைந்தனர் என்பது. கற்கி முகி-கற்கியின் முகத்தையுடையது; கற்கி-குதிரை: குதிரை முகமுடைய பூதம். முருகாறு-திருமுருகாற்றுப்படை. முகலி-பொன் முகலியாறு. இது திருக்காளத்தியிலுள்ளது. இலக்கணம் செய செய-அடுக்குத் தொடர் செய செயென -செய-என. என்பதிலுள்ள அகரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. தொகுத்தல் விகாரம் இ. திருவருட்பா திரு.--அருள்-பா. இறைவன் திருவருளால் பாடப்பட்ட பாடல் என்றும் இறைவன் திருவருளைப் பெறப்பாடிய பாடல் என்றும் பொருள்படும். அருள் நிரம்பிய பாடல் எனவும் கொள் ளலாம். இதனைப் பாடியவர் இராமலிங்க அடிகளார். ஆசிரியரைப்பற்றி பெயர்: இராமலிங்க அடிகளார். ஊர்: மருதுரர் (சிதம்பரத்திற்கு அருகில் உள்ளது) தந்தை: இராமையாபிள்கள. தாய்; சின்னம்மை. சமயம்: சமரச சன்மார்க்கம். காலம்: தோற்றம்: கி.பி. 1823. மறைவு 1873. பிற நூல்கள்: மனுமுறை கண்ட வாசகம், சன்மார்க்க விண்ணப்பங்கள். இளம் வயதிலேயே பெற்ருேரை இழந்த இவர் சென்னையில் தம் தமையனருடன் தங்கியிருந்தார். பின்பு துறவறத்தை மேற் கொண்டு சிதம்பரத்தில் பலகாலம் தங்கி, இறுதியில் வடலூரில் சத்திய தருமச்சாலை, ஞானசபை இவற்றை நிறுவினர். இவர் தம் பாடல்கள் இனியவை: கேட்போரை உருக வைக்கும் தன்மை வாய்ந்தவை; சாதி சமய பிணக்குகளை அறுத்துச் சமரச மனப் பான்மையை ஊட்டுபவை; அருட்பெருஞ்சோதி தனிப் பெருங் கருணையைப் புகழ்பவை. இவரை வள்ளலார் எனவும் அழைப்பர்.