பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புச் செய்யுள் வினவிடை முற்காலச் செய்யுள் அ. நற்றிணை 1. வேதமுதல்வன் யார் ? அவன் எத்தகைய இயல் புடையவன் ? வேதமுதல்வன் சக்கரமேந்திய திருமாலேயாகும். அவன் நிலம் காலாகவும், கடல் ஆடையாகவும், வானம் உடம்பாகவும், திசைகள் கைகளாகவும், ஞாயிறும் திங்களும் கண்களாகவும் கொண்டு, எல்லாவுயிர்களிடத்தும் உறைந்து, நிலம் முதலிய எல் லாப் பொருள்களையும் தன்னுள்ளே அட்க்கிக் கொண்டிருக்கிருன். 2. இலக்கணக்குறிப்பு வரைக. மாநிலம் சேவடி-உரிச்சொற்ருெடர். மளைநரல் பெளவம்-வினைத்தொகை. மதியமொடு-ஒடு எண்ணுப் பொருளில் வந்தது. 3. உறுப்பிலக்கணந் தருக. சேவடி-செம்மை-அடி. ஈறுபோதல் என்ற விதிப்படிமை விகுதிகெட்டு செம் என நின்று, ஆதிநீடல் என்ற விதிப் படி முதல் நீண்டு சேம் என்ருகி, இணையவும் என்ற விதிப்படி ம் கெட்டுச் சே என்று நின்று சே-அடி சேவடி என்ருயிற்று. ஆ. அகநானூறு 1. தலைவன் நாடு எத்தகைய இயற்கை எழிலை உடையது ? தலைவனுடைய நாட்டில், மூங்கிலின் துளையிலே மேல் காற்று மோதி எழுப்பிய ஒலி குழலோசையாகவும், அருவியொலி முழ வொலியாகவும், கலைமான்களின் குரல் பெருவங்கியத்தின் இசை யாகவும், வண்டொலி யாழிசையாகவும் ஒலிக்கின்ற இசையைக் கேட்டு மயில்கள் விறலியர்போல ஆடுகின்றன. அக்காட்சியைக் குரங்குகள் வியந்து நோக்கி மகிழ்கின்றன.