பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

902 மணிமேகலை சிறு மூங்கிலின் வேரைப் பிளந்து, தேன் கூட்டைச் சிதைத்து, ஆசி னிப் பலாச் சுளைகளைக் கவர்ந்து. சுரபுன்னை மலர்கள் உதிரும்படி கருங்குரங்குகள் நடுங்க, பெண்யானைகள் குளிரும்படி வீசி, யானைத் தந்தங்களை வாரிக்கொண்டு, பொன்னும் மணியும் கொழித்து, வாழை முறியவும் இளநீர்க்குலைகள் உதிரவும் தாக்கி, மிளகுக் கொடிகள் சாய, மயிலும் கோழியும் அஞ்சியோட, ஆண்பன்றியும் கரடியும் குகைகளில் நுழைய, காட்டுக்காளைகள் முழங்க மலையுச் சியிலிருந்து இறங்கிவரும் என்று திருமுருகாற்றுப்படையில் வரு னிக்கப்பட்டுள்ளது. 3, இலக்கணக் குறிப்பு வரைக. அலங்குசினை புலம்ப-வினைத்தொகை. மீமிசை நாகநறுமலர்-ஒருபொருட் பன்மொழி. மீமிசைக் கிளவி என்றும் சொல்வர். பொன் கொழியா-செய்யா என்னும் வாய்பாட்டு வினை யெச்சம். குரூஉ மயிர்-இன்னிசையள பெடை. ஈ. மணிமேகலை ஆதிரை பிச்சையிட்ட காதை 1, விஞ்சையர் பூங்கொடி யார் ? அவள் வரலாறென்ன o விஞ்சையர் பூங்கொடி காயசண்டிகை என்னும் வித்தியாதர மகளாவாள். அவள் பொதிய மலையருகில் ஒர் ஆற்றங்கரையில் பன்னி ரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பழுக்கும் நாவற் பழமொன்றை மிதித்து விட்டாள். அது விருச்சிகமுனிவன் உண்பதற்காக வைக் கப்பட்டிருந்தது. அவள் மிதித்து விட்டதை அறிந்த முனிவன் சீற்றங்கொண்டு வானத்திற்செல்லும் மந்திரத்தை மறக்கும்படி சபித்தனன். மேலும் யானைத்தி என்னும் பசிநோயால் துன்புறும் படியும் சாபமிட்டான். பின்பு மணிமேகலை வைத்திருந்த அமுத சுரபியின் உதவியால் அந்நோய் நீங்கிச் சென்ருள். 2. சாதுவன் பொருள்களை யெல்லாம் இழக்கக் காரணம் என்ன? ஆதிரையின் கணவனகிய சாதுவன் என்பவன் தன் மனை வியைப் பிரிந்து, பரத்தை ஒருத்தியைக் கூடி வாழ்ந்து, வட்டாடி யும் சூதாடியும் பொருள்களை யெல்லாம் இழந்தான். 3. பரத்தை சாதுவனை அகற்றிவிடக் காரணம் என்ன ? சாதுவன் வட்டாடுதலினாலும் சூதாடுதலினலும் பொருளை யெல்லாம் இழந்தான். கைப்பொருள் அனைத்தையும் இழந்தகார

      • -