பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.7//o சிறப்புச் செய்யுள் விளுவிடை 15. இராமன் இன்னும் உயிர் தாங்கிக்கொண்டிருப்பதற். குக் காரணமாக அனுமன் என்ன கூறுகின்ருன் ? அன்னையே! நீ ஆடையில் முடித்துப்போட்ட அணிகலன்களைக் காட்டியபொழுது இராமன் அடைந்த நிலை நான் சொல்லும் வகை யினலே அறியத்தக்கதோ? அவன் உயிர் இன்னும் நிலைத்து நிற்ப தற்கு வேறு காரணமும் உளதோ? அந்நகைகளே கார்ண்ம். நீ அன்று கழற்றி யெறிந்த அணிகலன்களே உன்னுடைய மங்கல் நாணக் காத்தன என்று அனுமன், இராமனுட்ைய உயிர் நிலைத்து நிற்பதற்குக் காரணம் கூறுகிருன். 16. சீதையின் மங்கல நாணைக் காத்தவை எவை என்று அனுமன் கூறுகின்ருன் ? இதற்குப் பதினைந்தாம் வினவின் விடையையே விடையாகக் கொள்க. 17. அ னு ம ன் எதனை அடையாளமாகச் சீதைக்குக் காட்டின்ை? இராமனுடைய பெயர் பொறித்ததும், செய்தற்கரிய வேலைப் பாடு அமைந்ததும் ஆகிய கணையாழியைக் காட்டு என்று சொல்லி இதனை இராம்ன் கொடுத்தான் எனச் சொல்லி அக்கணையாழியை அனுமன் அடையாளமாகக் காட்டின்ை. 18. கணையாழியைக் கண்ட சீ ைத யின் மகிழ்ச்சியைக் கம்பர் எவ்வாறு கழறுகின்ருர்? கணையாழியைக் கண்ட சீதையின் மகிழ்ச்சிக்கு, இறந்துபோன வர்கள் தம் பிறவிப்பயனே அடைந்ததால் உண்டாகும் மகிழ்ச்சியை ஒப்பிடுவேனே ? அல்லது ஒன்றை மறந்து போனவர்கள் மீண்டும் அந்நினைவு வரப்பெற்றமையால் அடையும் மகிழ்ச்சியை ஒப்பிடு வேனே ? அல்லது பிரிந்த உயிர் திரும்ப வந்து சேர்ந்ததால் உண் டாகும் மகிழ்ச்சியை ஒப்பிடுவேனே எவ்வாறு சொல்வேன் : என்று கம்பர் கழறுகிருர், 19. மோதிரத்தைக்கண்ட சீதை யார் யாரை யொத்

  • .

தாள் ? மோதிரத்தைக் கண்ட சீதை, இழந்த மணியைப் பெற்ற நாகத்தையும், இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றவரையும், குழந்தைப் பேறடைந்த மலடியையும், குருடராயிருந்து மீண்டும் விழிபெற்ருேரையும் ஒத்தாள். 20. அனுமன் கொண்டுவந்து கொடுத்த கணையாழி சின்தக்கு எவ்வெவற்றைப் போல ஆகியது ? இதைக்கு அம்மோதிரம் பசித்தோர்க்குக் கிடைத்த உணவு போலவும், இல்லறத்தாரை அடைந்த விருந்துபோலவும், உயிரை மீட்கும் சஞ்சீவி போலவும் ஆகியது.