பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லி பாரதம் ら II ஆ. வில்லி பாரதம் பதினேழாம் போர்ச் சருக்கம் 1. கண்ணன் எந்த வடிவங்கொண்டு கன்னனிடம் சென் ருன் ? சென்று அவனிடம் எவ்வாறு இரந்தான்? கண்ணன் வேதியன் வடிவங்கொண்டு கன்னனிடம் சென்று, கன்னனே ! நீ இவ்வுலகில் துயர்ப்படுகின்றவர்களுக்கு வேண்டிய பொருள்களைத் தருகின்ருய் என்று கேள்விப்பட்டேன். நான் மேரு மலையில் தவம் செய்தவன் ; பெரிய வறுமைத் துயரால் வாடுகி றேன். நீ இப்பொழுது எனக்கு ஒன்று தரவேண்டும் என்ருன். அது கேட்ட கன்னன் நான்தரத்தக்க பொருள் யாது ? சொல்” என்று கேட்க வேதியனுகவந்த கண்ணன் "உன் புண்ணியம், அனைத்தையும் தரவேண்டும் என்றிரந்தான். 2. புண்ணியம் அனைத்தும் உதவுக எனக் கேட்ட வேதிய னுக்கு கன்னன் என்ன கூறினன்? ஐயனே! என் உயிரோ நிலை கலங்கி யிருக்கிறது. உயிர் உட லில் இருக்கிறதோ வெளியில் இருக்கிறதோ என்று அறியவும் முடியவில்லை. நான் வேண்டுவார் வேண்டும் பொருளெல்லாம் தருகின்ற நாளில் நீ வரவில்லையே. இருப்பினும் இப்பொழுது புண்ணியம் அனைத்தும் உனக்குக் கொடுத்தேன். நீ பெற்றுக் கொள்க. அயனும் உனக்கு நிகராக மாட்டான் என்ருல் உனக்குக் கொடுப்பதைவிட என் புண்ணியம் எனக்குப் பெரிதா? என்று வேதியனிடம் கன்னன் கூறினன். 3. கண்ணன் கன்னனிடம் புண்ணியத்தை எவ்வாறு பெற்ருன் ? கன்னன் புண்ணியம் அனைத்தும் ஈந்தேன் என்றவுடன் வேதி (யன் மனம் மகிழ்ந்து, நீர் வார்த்துத் தருக" என்ருன். போர்க் களத்தில் அம்பு பட்டுக் கிடக்கும் கன்னன் தன் ம்ார்பில் தைத் துள்ள அம்பைப் பிடுங்கி அங்கிருந்து வரும் செந்நீரால் வார்த்துக் கொடுக்க வேதியணுகி வந்த கண்ணன் பெற்ருன். 4. முன்னமோர் அவுனன் செங்கை நீர் ஏற்று மூவுல கும் உடன் கவர்ந்த கதை யாது ? இதற்கு விடை உரைப் பகுதியிற் கண்டு கொள்க. 5. கன்னன் கண்ணனிடம் என்ன வரம் வேண்டினன்? அதற்குக் கண்ணன் கூறியதென்ன ? ■ வேதியணுகி வந்தவன் கன்னனை நோக்கி உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள், தருகிறேன் என்ருன். கன்னன், முனிவனே