பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 13 சிறப்புச் செய்யுள் விவிைடை வெவ்வினையால் நான் பிறவி எடுத்தால் பிறவிதோறும், என்பால் வந்து இல்லை என்றிரப்போர்க்கு நான் இல்லை என்று சொல்லாத இதயத்தை நீ எனக்கு அளிப்பாயாக என்று வேண்டினன். அதற்கு அவ்வேதியன் அவனைத் தழுவி நின்று, நீ எத்தனை பிறவி எடுத்தா லும் அப் பிறவியிலெல்லாம் ஈகையும் செல்வமும் எய்தி, முத்தியும் பெறுவாயாக என்று உரைத்தான். 6. வேதியன் கன்னனுக்கு வரமளித்த பிறகு அவன் முன்பு எவ்வாறு தோன்றிக் காட்சியளித்தான்? கன்னன் கண்டு கண் களிக்குமாறு, கார் மேகத்தைக் காட்டி லும் கரிய திருமேனியும் பஞ்சாயுதம் விளங்கும் கைகளையும் உடை யவனகி, முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரன் என்ற யானையைக் காப்பதற்காக வந்த திருக்கோலத்துடன் காட்சியளித்தான். 7. கன்னனுக்குத் திருமால் காட்சியளித்தவுடன் யார் யார் பணிந்தார்கள்? கன்னன் என்ன கூறி மகிழ்ந் தான் ? திருமால் காட்சியளித்தவுடன் தேவர்களும், ஏனைய தேவப் பிறவியுடையவர்களும் தேவர் தலைவனகிய இந்திரனும், அயனும், முனிவர்களும் கண்டு மலர் தூவிப் பணிந்தார்கள். கன்னன், "போர்க்களத்தில் அருச்சுனனுடைய அம்புபட்டு இறக்கவும், நாராயணனைக் காணவும் பெற்றேன்’ என்று கூறி மகிழ்ந்தான். 8. திருமாலைக் கண்ட கன்னன் அகமிக மகிழ்ந்து கூறி யனவற்றைச் சுருக்கி வரைக. வேள்வி புரிந்தும், கங்கை முதலிய புனலாடியும், யோகங்கள் செய்தும், மலர் தூவிப் பூசித்தும், போகமெல்லாம் சுருக்கிக் கடுத் தவம் புரிந்தும் பெறமுடியாத பெரும் பேற்றை நான் உன்னரு ளால் பெற்றேன். மலை, மழை முகில், கடல்நீர், காயம்பூ இவற்றையொத்த திரு மேனியும், கதை, வாள், சங்கு, சக்கரம், வில் என்னும் ஐம்படை யும், துளசிமாலையணிந்த மார்பும், தோளும், மணிக் கழுத்தும், செவ்விதழும், தாமரை முகமும், சோதி முடியும் ஆகிய இவற்றை இப்பிறப்பிலேயே நான் கண்டு கொண்டேன். தருமன் முதலான என் தம்பிமாருடன் போர் புரிந்து, என் தோழனுக்காகச் செஞ்சோற்றுக் கடன் கழித்தேன். இந்திரனுக்குக் கவசகுண்டலமீந்தேன். புண்ணியங்களை உனக்குக் கொடுத்தேன். ஆதலால் நான் மாதவந் செய்தவனவேன். - கங்கையைத் தோற்றுவித்த உன் திருவடியை வணங்கப் பெற் றேன். உன்னல் மதிக்கப்பட்டேன், உன் மார்பும் தோளும் தீண் டப் பெற்றேன். அம்பு பட்டு வீழ்ந்தும் உணர்வுடன் உன் திருப் பெயரைச் சொல்லப் பெற்றேன். இவ்வாறு யான் பெற்ற பேற் றைப்போல வேறு யார் பெற்ருர்கள்? என்று கன்னன் கூறினன்.