பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புரவறிதல் 'I W () - - - - - - _ 2. இரா மலிங்கர் கூறும் இனித்த சுவைக் கரும்பு எத்த கைய இயல்புடையது ? y இராமலிங்கர் கூறும் கரும்பு பார்த்தாலும், நினைத்தாலும், படித்தாலும், படிக்கக் கேட்டாலும், உணர்ந்தாலும், ஈர்த்தாலும், பிடித்தாலும், அனைத்தாலும் யாது செய்யினும் இனிக்கின்ற சுவைக கருமபு. o 3. இலக்கணக் குறிப்பு வரைக. ஒன்ருகக் கூட்டி-தொகுத்தல் விகாரம். தனித் தனி-அடுக்குத் தொடர். முக்கணி பிழிந்து-பண்புத் தொகை. அடிமலர்-உருவகம். அலங்கல் அணிந்தருள்-காரணப் பெயர். சிறப்பு உரைநடை வினவிடை 1. ஒப்புரவறிதல் 1. ஒப்புரவு என்னும் சொல்லுக்குரிய பொருள்கள் யாவை ? பரிமேலழகர் கூறும் பொருள் யாது ? ஒப்புரவு என்னுஞ் சொல்லுக்கு உபகாரம், ஒற்றுமை, சமா தானம் முதலிய பல பொருள்கள் உண்டு. பரிமேலழகர் ஒப்புரவறி தல் என்பதற்கு உலக நடையினை அறிந்து செய்தல் என்று பொருள் கூறுகின்ருர். 2. உலகநடை என்பதற்கு உயர்ந்தோர் ஒழுகிய நெறி யில் ஒழுகுவது என்று பொருள் கொள்வது பொருந் துமா ? ஏன் 2 உலக தடை என்னுஞ் சொல்லுக்கு உயர்ந்தோர் ஒழுகிய நெறியில் ஒழுகுவது என்று பொருள் கொள்வோமெனில் ( ஒப்புர வதிகாரத்தில் வரும் குறட் பாக்களில் ஒன்றேனும் அவ்வொழுக்கத் தைக் குறிக்கவில்லை. (2) மேலும் உயர்ந்தோர் ஒழுகிய நெறியில் ஒழுகுவதை ஒழுக்கம் உடமை என்னும் அதிகாரத்தில் உலகத் தோடொட்ட் ஒழுகல் பல கற்றும், கல்லார் அறிவிலாதார் . என்ற குறட்பாவில் விளக்குகின்ருர் (3) இக்குறளுரையில் பரிமே லழகரும் உலகத்தோடு பொருந்த ஒழுகலாவது-உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்ருன் ஒழுகுதல் என்று பொருள் கூறினர். ஆதலால் உலகநடை என்னுஞ் சொல்லுக்கு இவ்வாறு பொருள் கொள்வது பொருந்தாது.