பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 சிறப்பு உரைநடை விவிைடை 3. உலக நடை என்பதற்கு வள்ளுவர் கருத்துப்படி என்ன பொருள் கொள்ள வேண்டும்? ஏன் அவ்வாறு கொள்ளவேண்டும் ? உலக நடை என்னுந் தொடருக்கு உலகத்தின் தடைபேறு என்று பொருள் கொள்ளுதலே வள்ளுவர் திருவுள்ளத்துக்கு ஏற்ற தாகும். ஏனெனில் ஒப்புரவறிதல் அதிகாரத்தில் வரும் ஒவ்வொரு குறட்பாவும் மக்கட் சமுதாய வாழ்க்கைக்கு இன்றியமையாத உலக உபகாரங்களை அறிந்து செய்தல் என்பதையே விளக்கி நிற் கிறது. அதனால் உலகத்தின் நடைபேறு என்று பொருள் கொள் வதே பொருந்தும். 4. ஜன சமூக வாழ்க்கையாவது யாது? ஜன சமூக வாழ்க்கையாவது :- தனியரசு புரியும் முடியரசன் முதல் தாழ்வுற்ற குடியானவன் ஈருகவும். முற்றத் துறந்த முனி வன் முதல் பற்றே மிக்க உலகாயதன் ஈருகவும் உள்ள உலகத்து மக்களெல்லாம் ஒருவர்க்கொருவர் செய்யும் உதவியாலே வாழ்ந்து, வரும் நிலையாகும். - 5. ஜனசமூக வாழ்க்கையின் வளர்ச்சிக்குரிய உபகாரங் கள் யாவை? மக்கட் சமூக வாழ்க்கையின் வளர்ச்சிக்குத் துணை Ա] T Յ)ւի5ՆT :-- - ஊருணி, ஆதுல் சாலை, கல்விச் சாலை, மருத்துவ விடுதி முதலி யன தோற்றுவித்தலும் மக்கட் சமூகத்தின் அறிவையும் செல்வத் தையும் பெருக்குதற்குரிய வழியைத் தேடுவதும் நாட்டு வளர்ச் சிக்கு இடை யூருனவற்றை விலக்க முயலுவதும் முதாைனவை மக்கட் சமூக வர்ழ்க்கையின் வளர்ச்சிக்குத் துணை நிற்பவையாகும். 6. உலகநடை என்னும் தொடருக்குப் பொருள் உயர்ந் தோர் ஒழுக்கம் அன்று, உலக நடை பேறுதான் பொருள் என்பதை ஆசிரியர் எவ்வாறு உறுதிப் படுத்துகிருர்? பரிமேலழகர், கண்ணுேட்டத்துள்ள துலகியல்' என்னுங் குறளில், உலகியல்-என்பதற்கு உலக நடை என்று பொருள் கூறி, உலக நடையாவது-ஒப்புறவு செய்தல், புரந்தரல், பிழைத்தன. பொறுத்தல் முதலியன என்று விரித்துரைப்பதால் உயர்ந்தோர் ஒழுக்கம் என்னும் பொருளில் உலக நடை என்னுந் தொடரை வழங்காது, உலகத்தின் நடைபேறு என்னும் பொருள்படவே வழங்குகிருர். மேலும் சிவஞான முனிவர் தருக்க சங்கிரக தீபிகை யில் உலக நடையை ஆன்ருே ரொழுக்கத்தினின்று வேருக வைத்து வழங்குகின்ருர். ஆதலினல் இத்தொடருக்கு உலக நடைபேறு என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என ஆசிரியர் உறுதிப் படுத்துகிரு.ர்.