பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。 சிறப்பு உரைநடை விவிைடை 11. ஒப்புரவு செல்வத்தான் மட்டுமின்றிப் பிறவற்ருனும் ஆதல் உண்டா? சான்று கொண்டு நிறுவுக. ஒப்புரவு செல்வத்தான் மட்டுமன்றி, மனம், மொழி, மெய் களாலும் செய்யப்படும். இடனில் பருவத்தும்’ என்ற குறளில் செல்வமில்லாமை ஒன்று காரணமாக ஒப்புரவு இழக்கப்படுவ தன்று; அதனைச் செலும் வழி பலவாம்; அவ்வழிகளை யறிந்து செய்ய வல்ல இயற்கை யறிவுடையார், அஃதொன்றில்லாமை பற்றி, ஒப்புரவு செய்யத் தளரமாட்டார்’ என்னும் க ரு த் ைத வெளிப்படுத்துகின்ருர் வள்ளுவர். மற்ருெரு குறளில் செய்யத் தக்கனவற்றைச் செய்யாமல் இருப்பதுதான் நயனுடையானுடைய வறுமை எனப்படும்’ என்ற கருத்தைக் கூறுகின்ருர். ஆதலினல் ஒப்புரவு செல்வத்தான் மட்டு மின்றி மனம், மொழி, மெய்களாலும் செய்யப்படும் என்பது புலனுகின்றது. 12. ஒப்புரவில்ை கேடு வருமெனின் என்ன செய்ய வேண்டுமென்று வள்ளுவர் கூறுகின் ருர்? அவ்வாறு கூறக் காரணமென்ன? ஒப்புரவில்ை ஒருவனுக்குக் கேடு வரும் என்று சொல்வார் உள ரானல், அந்தக் கேட்டை அவன் தன்னை விற்ருயினும் பெற்றுக் கொள்ளுக என்று வள்ளுவர் கூறுகின்ருர். மேலும் வள்ளுவர், அவனுடைய கேட்டை உலகம் கெடுவாகக் கருதாது என்றும் கூறு கிரு.ர். இவன் ஒருவன் கெட்டாலும் அதனால் விளையும் பலன் உல கம் முழுதும் சார்ந்து இன்புறுத்துவதால் தன்னை விற்ருயினும் அக் கேட்டினைப் பெறுக என்று கூறுகின்ருர். 13. புறநானூறு இவ்வுலகம் நடைபெறுவதற்கு என்ன காரணம் கூறுகிறது? இக்கருத்தைக் கூறும் குறள் எது? சான்ருேர், அமிழ்தம் கிடைத்தாலும் தனித்து உண்ணமாட் டார்; வெறுப்பில்லாதவர்; சோம்பியிரார்; உயிரைக் கொடுத்தும் புகழ் பெறுவர்; உலகம் முழுதும் கிடைப்பினும் பழியைக் கொள் ளார்; அயர்வு இல்லாதவர்; தமக்கென வாழார்: பிறர்க்கென முயலுவர். இத்தகைய சான்ருேர் இருப்பதினலே உலகம் நடை பெறுகிறது என்று புறநானூறு கூறுகிறது. இக்கருத்தைக் கூறும் குறள் பண்புடையார்ப் பட்டுண்டு உல கம் அஃது இன்றேல், மண்புக்கு மாய்வது மன்’ என்பதாகும். 14. திருக்குறளில் ஒப்புரவுக்குப் பிறகு ஈகையை வைத் துக் கூறக் காரணம் என்ன? ஒப்புரவு பொதுவாக எல்லார்க்கும் பயனளித்தலால் அது முன் னர்க் கூறப்பட்டது. வறியார்க்கே பயன்படுதலால் ஈகை பின்னர்க் கூறப்பட்டது.