பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகம் ...'", - - யுள்ளன. இதன் கோநகரம் மதுரை. துறைமுக நகரம் கொற்கை. கொற்கைத் துறையில் எடுக்கப்பட்ட முத்துக்கள் உரோம பெரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கி.மு._நான்காம் நூற்ருண் டில், பாண்டியநாட்டு மெல்லிய ஆடைகள், மெளரியப் பெருநாட் டிற்கு மிகுதியாக அனுப்பப்பட்டன என்று சாணக்கியர் பொருள் நூல் கூறுகின்றது. 9. பாண்டியர் தமிழை எவ்வாறு வளப்படுத்தினர் ? தமிழில் அவர்கள் எத்தகைய ஆற்றல் பெற்றிருந் தனர் ? பாண்டியர், சேரசோழரைப் போலத் தம்மை நாடிவந்த புல வர்களை ஆதரித்த அளவில் நின்ருரல்லர். மேலும், மதுரையில் நக்கீரர் முத்லிய புலவர் பெருமக்களைக் கூட்டித் தமிழ் ஆராய்ந் தனர் ; தமிழ் வளர்ச்சியில் கண்ணுங் கருத்துமாக இருந்தனர் ; இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் வல்ல புலவர் பெருமக்களைப் போற்றித் தமிழை வளப்படுத்தினர் தாமும் கவி பாடும் ஆற்றல் பெற்றிருந்தனர். பாண்டிமா தேவியரும் செய்யு ளியற்றும் தன்மை பெற்றிருந்தனர். தலையாலங்கானத்துச் செரு வென்ற் ந்ெடுஞ்செழியனும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழிய னும் பாண்டியருட் சிறந்தவராவர். 10. கொங்குநாடு எது ? இப்பெயர் பெறக் காரணங்கள் என்ன ? கொங்குநாடு மலைவளம் செறிந்த சேலம். கோயம்புத்துளர், நீலகிரி மாவட்டங்களைக் கொண்டது. பொன் மிகுதியாகக் கிடைத்து வந்த காரணத்தால். இந்நாடு கொங்கு நாடு ' எனப் பெயர் பெற்றது என்று ஒருசார் அறிஞர் கூறுகின்றனர். மலே களில் தேன் மிகுதியாகக் கிடைத்தலின் இப்பெயர் பெற்றது என் பது பிறிதொரு சார் அறிஞர் கருத்தாகும். 11. கொங்கு நாட்டில் எவ்வெப் பகுதிகள் எந்த எந்த அரசர்களால் ஆளப்பட்டு வந்தன? கொங்கு நாட்டில் இன்றுள்ள உடுமலைப் பேட்டைப் பகுதி சங்க காலத்தில் முதிரமலை நாடு எனப்பட்டது. அந்நாட்டைக் குமணனும் அவன் முன்னேரும், பின்னேரும் ஆண்டு வந்தனர். இன்றுள்ள தர்மபுரியும், அதனைச் சூழவுள்ள நிலப்பகுதியும் அதிய ம்ான்கள் என்ற சிற்றரசர் ஆட்சியில் இருந்து வந்தன. அந்நாட் டின் தலைநகரம் தகடூர் என்பதாகும். கொல்லிமலைப் பகுதியை வல் வில் ஒரியும், அவன் முன்ைேரும், பின்ைேரும் ஆண்டு வந்தனர். இங்ங்னம் கொங்கு நாடு, சிற்றரசர் பலர் ஆட்சியில் அமைந்திருந் தது. சிலகாலங்களில் இந்நாடு சேரர் ஆட்சிக்கும் உட்பட்டது. அங் துனம் உட்பட்டிருந்த காலத்தில் கொங்கு நாட்டுக் கருவூர், கொங்கு மண்டலத் தலைநகரமாக விளக்க முற்றிருந்தது.