பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s。 சிறப்பு உரைநடை வினவிடை கோறில் இபி, 775ல் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஆகிய வற்றைக் குறிப்பிடலாம். 6. வியோங்ஸ் நாவிலுள்ள கோவிலில் காணும் உருவச் சிலைகளில் குறிப்பிடத்தக்க இரு உருவங்கள் எவை? அவை எம்முறையைப் பின்பற்றினவாகக் காணப் படுகின்றன ? ஒன்று, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ள திருமாலின் வடிவமும், மற்ருென்று வைரவமூர்த் தியாக விளங்கியுள்ள சிவ பெருமானின் வடிவமும் ஆகும். இவ்விரு உருவச் சிலைகளின் முக உறுப்புக்களும் முகத்தின் தோற்றமும் தவிர, மற்றெல்லா அமைப்புக்களும் தென் இந்திய முறையைப் பின்பற்றினதாகவே காணப்படுகின்றன. 7. லாஜோங்கீரா என்பவர் தாகூப்பாவில் உள்ள உருவச் சிலையைப்பற்றி என்ன கூறுகிருர்? தாகூப்பாவிலுள்ள சில உருவச்சிலைகளைப்பற்றி லாஜோங்கீரா எனும் நிபுணர் பல மடிப்புகளுடைய ஆடைகளும், எண்ணிறந்த அணிகலன்களும், உடலின் ஒசிந்த இயற்கை வளைவும் திராவிட நாட்டுப் படிமங்களை ஒத்திருக்கின்றன என்று அவர் தெளிவாக விளக்குகிரு.ர். 8. மலேயாவில் தென்னிந்திய முறைக் கட்டிடக் கலை செல்வாக்குப் பெற்றிருந்தது எதல்ை அறியப்படு கிறது ? கடாரத்தில் கிடைத்த புதை பொருட்களில் ஒரு பழைய சிவன் கோயிலின் எஞ்சிய பகுதிகளும் கண்டு பிடித்துள்ளனர். இக்கோவிலின் கட்டிடக் கலைமுறை பல்லவர் பின்பற்றியிருந்ததை ஒத்ததெனத் தொல்பொருள் நிபுணர் குவாரிட்ச் வெல்ஸ் என்பார் கருதுகின்ருர். அதன் அண்மையில் காணப்படும் மற்ருெரு கோவி லின் கூரை மாமல்லபுரத்து ரதங்களின் கூரைகளைப்போல் அமைந் திருக்கின்றது. இதனுல் கட்டிடக் கலையிலும் அங்குத் தென்னிந்திய முறை செல்வாக்குப் பெற்றதை அறியலாம். 9. தாகூபாவில் கிடைத்த கல்வெட்டினல் அறியப்படும் செய்திகள் யாவை ? அவனி நாரணம்’ என்ற ஏரி ஒன்று அமைக்கப்பெற்ற விவரம் அக்கல்வெட்டுக் கூறுகின்றது. மூன்ரும் நந்திவர்மன் (கி. பி. 826-50) பெயரால் நாங்கூர் தலைவர் ஒருவர் அதை அமைத்த தாகக் கூறப்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டினல் ஆங்கு உயர் நிலையிலிருந்த வாணிகக் குழுக்களைப்பற்றிய செய்தி ஒன்றும் அறி கின்ருேம். அந்த ஊரில் தங்கியிருந்த மணிக்கிராமத்தாரின் அதாவது, வணிகரின் பொறுப்பிலேதான் அந்த ஏரியின் பாது