பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.74 சிறப்பு உரைநடை விவிைடை இத்தகைய பெரிய நாடுகளில் வாழ்வோரெல்லாம் பலமொழி iன்று ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். அதல்ை ஒரே நாடு அல் லது ஒரே அர்சு என்ற உணர்வுக்குத் தமிழின் வளர்ச்சி தடையாத இராது. அதனல் ஒரு மொழியிலேயே இந்திய நாட்டு மக்கள் ஒன்ருவர் என்று கூறுவது பொருத்தமற்றது என்று ஆசிரியர் விளக்குகின்ருர். 3. மொழியைவளர்க்கும் முறையில் பிறமொழியாளர்க்கும் தமிழ்ர்க்கும் உள்ள வேறுபாடென்ன? பல கலைகளும் செழித்துள்ள மொழிகளாகிய ஆங்கிலழ், செரு மானியம், பறங்கி என்பன முன்னர் இல்க்கண இலக்கியம் இல்லாத பிள்ளைப் பருவ மொழியாக நிலவின. பின்னர் புதுமையை விரும் பிய அம்ம்ொழியினர் தத்தம்து மொழிகளிலேயே புதுக் கலைகளேட் புகுத்தி நன்மை பெற்றனர். தங்கள் மொழியைக் குறைத்துக்கூறி இழிவைத் தேடிக் கொள்ளவில்லை. நம் தமிழோ மிகமிகப் பழமை வாய்ந்தது. இலக்கண இலக்கி யங்கள் நிரம்பப் பெற்றது. புதிய கலைகள் தோன்றுதற்குரிய வளம் ப்டைத்தது. இதனை உணராத மக்கள் புதிய கலைகள் தோன்றுதற்குரியதன்று தமிழ் மொழி என்று குறைத்துக் கூறிப் பழிய்ைப் பெறுகின்றன்ர். இதுவே பிறமொழியாளர்க்கும் தமி ழர்க்கும் உள்ள வேறுபாடு. 4. தாய்மொழி வளம் பெறுவது ஏன் இன்றியமை யாதது? அறிவு வளம், அறநூற் பயிற்சி, நல்ல இல்லற வாழ்வு, அரசி யல் தெளிவு முதலியவற்றைப் பெறுவதற்கு மொழிவளமே காரண மாகும். அதிலும் தாய்மொழி வளமே இன்றியமையாததாகும். வளம் பெருத சிறிய மொழியாக இருந்தாலும் தாய்மொழிதான், கரிய அறிவு, நூலாக்கும் திறம்ை முதலியனவற்றுை வளர்ந் தோங்கச் செய்யும். ஆதலால் தாய்மொழி வளம் பெறுவதே வேண்டப்படுவதாகும். 6. ஆராய்ச்சியின் கடமை 1. பொதுமக்கள் இலக்கியங்களை எவ்வாறு நோக்குகின் ருர்கள்? பொது மக்கள் இலக்கியங்களைக் காணும் முறையில் அவர்கள் வியக்கும் பொருள்களே முன் வரிசையில் நிற்கின்றன. அவர்கள் பழகியறிந்த பொருள்களே சிறந்து காணப்படுகின்றன. மிகச் சிறந்தவை தவிர ஏன்ையன அவர்கட்குப் புலனுவதில்லை. இலக்கியங் களின் முன்னணியில் காணப்படுபவை சிறப்பில்லன ஆயினும் அவர்கட்குச் சிறந்து தோன்றும்; பின்னணியில் மறைந்து நிற்பன சிறந்தனவாயினும் சிறப்பின்றியும் தோன்றும்.