பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o& சிறப்பு உரைநடை வினவிடை கட்டுண்டபடியே இடிபோல் முழங்கவும், குழந்தைகள் பாலின்றி அலறவும், மகளிர் மலரின்றிக் கூந்தல் முடிக்கவும் வீடுதோறும் அழுகுரல் கேட்கவும் நீ கதவடைத்து இனி திருக்கிருய் ! வேந்தே! இது கொடுமை, நீ அறத்தைப் போற்றுவதாக இருந்தால் இதோ உன்_ஊர் எனக் கதவைத் திறந்துவிடு ; அன்றி மறம் பேர்ற்றுவ தாயின் போர் செய்யப் புறப்படு. நீ இங்கு இருக்கும் நிலையில் அறமுங் காணேன், மறமுங் காணேன். கதவடைத்து மூலையில் நீ யிருப்பது நாணத்தக்கதாயுள் வளது என்பனவாகும். - 8. கோவூர் கிழாரின் அஞ்சாமை எவற்ருல் புலனுகும்? ஊரின் துன்பங்கண்டும் ஈங்கினித்திருத்தல் இன்னதம்ம என்று புலவர் இடித்துரைக்கின் ருர். அரசனது வலிம்ையை இகழ்ந் துரைத்தல் இயலாதாயினும், மதில் வலி பெரிதென மதித்து, அத னுள் வதிவது அழகியதன்று என எள்ளியுரைத்தார். துன்னரும் துப்புடையவன் நீ ஒதுங்கியிருத்தல் நாணத்தக்கது என்று கடிந்துரைத்தார். இவற்ருல் கோவூர் கிழாரின் அஞ்சான்ம இனிது ளங்கும். ". . 9. செஞ்சொற்கள் பிறந்த நெஞ்சமே நாகரிகம் வாழும் கோயில் ஆகும் இதை விளக்குக. அரசனைப் பலவாறு புகழ்ந்து, அவன் செயலனைத்தும் செம் மையே எனக்கூறி_அரசனுடைய செல்வாக்கைப் பெற விரும்ப வில்லை கோவூர் கிழார். குடிகளின் துன்பத்தைப் ப்ோக்காமல், தன்னலங்கொண்டு பதுங்கியிருக்கின்ற செயலைக் கடிந்து, அதுளுல் பாதுவரினும் வருது என்று துணிந்து பொது நலமே பேணி, பிறி தின் நோய் தன் நோய் போற்றி அரசனிடம் இடித்துரைத்தார். அச் சொற்களே செஞ்சொற்கள். அச் செஞ்சொற்கள் பிறந்த இநஞ்சமே நாகரிகம் வாழும் கோயில் ஆகும் என ஆசிரியர் விளக்கு கிரு.ர். 10. நலங்கிள்ளி உறையூரில் முற்றுகை யிட்டிருந்த பொழுது கோவூர் கிழார் கூறியன யாவை ? நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டிருந்த பொழுது மனம் பொருத கோவூர் கிழார் இருவரிடத்தும் சென்று ஒரு குடியிற் பிறந்த மக்கள் இருவரும் இவ்வாறு பொருதல் அறிவற்ற செயலா கும். நெடுங்கிள்ளி சூடியதும் ஆத்தியே நலங்கிள்ளி சூடியதும் ஆத்தியே. நீவிர் இருவரும் விரும்பியது வெற்றியே. இருவரும் வெல்லும் வழி உண்டோ ? போரென்ருல் ஒருவருக்குத் தோல்வி யும் ஒருவருக்கு வெற்றியுமாக முடிதல் இயல்பு. சோழன் வென் முன் சோழன் தோற்ருன் என்று சொல்லும்ாறு ஒரு போர் நிகழ்த் துவது_ அறிவுடைமையாகுமா ? இச் செயலால் பெருமையும் மகிழ்ச்சியும் உங்கட்கு இல்லையாயினும் உங்களைப் போன்ற சேரர்க் கும் பாண்டியர்க்கும் அவை உண்டாகும். அதனுல் போரைத் தவிர்க என்று கூறினர். _