பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..', 4() சிறப்பு உரைநடை விவிைடை 3. வீரமும் வண்மையும் ஒன்ருேடொன்று தொடர் புடைய குணங்கள் என்பது எதனுல் விளங்கும் ? தொல்காப்பியர் பெருமிதம் தோன்றுதற்குரிய தறுகண் முதலியவற்ருேடு கொடையையும் சேர்த்துக் கூறியிருப்பதும், "கொடை மடம் படுதல் அல்லது பாரி படை மடம் படான் என வருவது போல்வனவும் இவ்வுண்மையை விளக்க நிற்கும். 4. பண்ணன் எத்தகைய செல்வவளங்களைப் பெற்றிருந் தான் ? காவிரியின் வடவயின் உள்ள சிறு குடிக்கண், பூஞ்சோலையும் மாந்தோப்பும், நெல்லிக்காவும் அவனுக்கிருந்தன. அவற்றிடை வாவி குளங்களும் வயங்கின. அவனுக்கு எத்துணை விளைபுலங்களும், படப்பை முதலியவும் அமைந்திருந்தன என அறுதியிட்டுரைத்தல் சாலாதெனினும், வள்ளண்மை செலுத்திய ஒண்ணிதிச் செல்வ ளுகிய அன்னன், அவை நனி மிகவுடையன் என எண்ணுதல் தவ ரு காது. 5. பண்ணன் செல்வ வளம் யார் யார்க்குப் பயன்பட்டது? அச்சிறு குடிக்கட் போதரும் பாணராயினும், புலவராயினும் மற்றியாவிராயினும், அவனது பூம் பொய்கையிற் சென்று குளிப் பர்' பூங்காவினுட் புக்கு மலர் பறித்து மறைவர் ; காவினுள்ளும் தேர்ப்பினுள்ளும் எய்தி இனிய தீவிய நெல்லிக்கனிகளையும் மாங் கனிகளையும் பறித்து உண்பர். அவனது மனையின்கண்ணே இரவலர் எண்ணிலாதவர் இடையருது வந்திண்டி அடிசில் ஆர்வர். 6. குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் எத்தகைய இயல்புகளை உடையவன் ? குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்னும் சோழர் பெருமான் பேரரசன் வீரமும் வண்மையும் உடையவன் - நல் லிசைப் புலவர்கள் பலரால் புகழ்ந்து பாடப் பெற்றவன். செஞ். ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண்டிங்களுள் வெயில் வேண்டி னும் வேண்டியது விளேக்கும் ஆற்றலே எனவும் மலையில் இழிந்து ம்ாக் கடல் நோக்கி, நிலவரையிழிதரும் பல்யாறு போலப், புலவ ரெல்லாம் நின்ளுேக்கினரே எனவும் பாராட்டப்பெற்ற வளவன் தோன்றல். 7. கிள்ளிவளவன் பண்னனிடத்துக் கொண்டிருந்த அன்பை விளக்குக. வளவன், தன்னை ஒரு பாணனுக வைத்துப் பண்ணனது ஈகையைப் பாராட்டிப் பாடியிருக்கும் அப்பாட்டிலே யான் வாழு நாளும் பண்ணன் வாழிய” என்பது முதலடியாகும். யான் உயிர் வாழு நாளையும் பெற்றுப் பண்ணன் வாழ்வாகை என்பது அதன் பொருள். அஃதோர் பாணன் கூற்றில் அமைந்திருப்பினும்,