பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -- - கிள்ளி வளவன் உள்ளக்கிடையன்ருே அது நாட்டில் வாழும் உயிர்கட்கெல்லாம் உயிராக விளங்கும் இறைவன், தான் வாழ் வதற்குரிய நாளையும் பண்ணன் பெற்று வாழவேண்டும் எனக் கருதின்ை என்னில், பண்ணன்பால் அவனுக்கிருந்த அன்பின் றிறத்தை என்னென்றியம்புவது ? 8. கிள்ளி வளவன் பாடிய பாடலில் என்னென்ன கூறப் பட்டுள்ளன ? பழுத்த மரத்தின்கட் புள்ளினம் ஒலித்தாற் போலப் பண்ண னுடைய இல்லத்தில் ஊண் உண்டலாலாகிய ஆரவாரம் கேட்கும் என்றும் மழை பெய்யும் காலத்தைப் பார்த்துத் தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்திலே அடையும் சிற்ற்ெறும்பின் ஒழுக்கினை இயாப்பப், பெரிய சுற்றத்துடன் கூடிய ப்ாண் சிறுவர்கள், சோற்றுத்திரளைப் பொருந்திய கையினரால், வேறு வேறு வரிசை யாக அவன் இல்லில் நின்றும் செல்வரென்றும் அப்பாட்டிலே கூறப்பட்டுள்ளன. அம்மட்டோ, பசிப்பிணி மருத்துவன்’ என்னும் அருமருந்தன்ன பெயரால் பண்ணன் கூறப்பெற்றுள்ளான். 9. சோழன் நலங்கிள்ளி கூறிய வஞ்சினக் காஞ்சியில் என்ன கூறுகிருன் ? பகையரசர் என்பால் வந்து ஈயென இரப்பார்களானுல் இந்த அரசாட்சியைக் கொடுப்பது எனக்கு எளிது. அதுமட்டுமா? இனிய உயிராயினும் கொடுத்து விடுவேன். என் வீரத்தை இகழ்ந்தபேதை து.ாங்குகின்ற புலியின்மேல் இடறிவீழ்ந்த குருடன் போலத் தப்பிச் செல்லுதல் அரிது என்று சோழன் நலங்கிள்ளி வஞ்சினங் கூறு கின்ருன்.