பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணக் கு றிப்புகள் வேற்றுமைத் தொகை : இரு சொற்கள் வேற்றுமைப்பொருள் படப் புணர்ந்து, ஐ. ஆல், கு, இன், அது, கண் என்னும் வேற்றுமை உருபுகள் தொக்கு (மறைந்து) வருவது வேற்றுமைத் தொகை எனப்படும். உதாரணம் : மரம் வெட்டினன். மரத்தை வெட்டின்ை என்பதில் ஐ உருபு தொக்கு வந்தது. வினைத் தொகை : காலங்காட்டும் இடை நிலைகள் மறைந்து வரும் பெயரெச்சத் தொடர் வினைத் தொகை எனப்படும். உதாரணம் : கொல்யானை, கொன்ற யானை என்பது பெய ரெச்சத் தொடர். இதில் காலங்காட்டும் இடைநிலை வந்துள் ளது. அதிலுள்ள கொல் என்ற பகுதி மட்டும் நின்று, கால இடநிலை மறைந்து, யானை என்னும் பெயரொடு சேர்ந்து வந்தது. இது முக்காலத்துக்கும் பொதுவாக வரும். பண்புத் தொகை : பண்புப் பெயரும் அப்பண்பை அடுத்து வரும் பெயரும் சேர்ந்து நின்று (ஆகிய என்னும்) பண்புருபு தொக்கு வருவது பண்புத் தொகையாம். உதாரணம் : செந்தாமரை. செம்மை பண்புப் பெயர் : தாமரை பண்படுத்து வரும் பெயர். செம்மையாகிய தாமரை என்பதில் ஆகிய என்னும் பண்புருபு தொக்கு நின்றது. இரு பெயரொட்டுப் பண்புத் தொகை : இரண்டு பெயர்கள் ஒட்டி வருகின்ற பண்புத் தெர்கை. முதலில் சிறப்புப் பெயரும் அடுத்துப் பொதுப் பெயருமாக ஒட்டி நின்று பண்புருபு தொக்கு வருவது. உதாரணம்': வாழைமரம். இதில் வாழை சிறப்புப் பெயர் : மரம் பொதுப் பெயர். உவமைத் தொகை உவமானமும் உவமேயமும் சேர்ந்து நின்று போல, போன்ற என்ற உவமை உருபு தொக்கு வருவது உவமைத் தொகையாம். உதாரணம் : மதிமுகம். இதில் மதி உவமானம் ; முகம் உவமேயம். மதிபோன்ற முகம் என்பதிலுள்ள போன்ற உவமை உருபு தொக்கு வந்தது. உம்மைத் தொகை : இரண்டு முதலிய பல சொற்கள் சேர்ந்து நின்று, உம் என்ற உருபு தொக்கு வருவது உம்மைத் தொகையாம். -- உதாரணம் : இன்ப துன்பம். இன்பமும் துன்பமும் என்பதி லுள்ள உம் தொக்கு நின்றது.