பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணக்குறிப்புக்கள் 1s, _ ஏவல் வினைமுற்று : ஒன்றைச் செய் எனக் கட்டளேயிடுவதாக வரும் வினைமுற்று ஏவல்வினை முற்று எனப்படும். இ, ஆய் என்ற o ஒருமை விகுதிகளையும் மின், உம், கள் என்ற பன்மை விகுதி களையும் பெற்றுவரும். உதாரணம் : உண், உண்பாய். வியங்கோள் வினைமுற்று : இஃது ஏவல்போலன்றி வே ண்-டி- க் கொள்ளும் முன்ற்யில் வருகின்ற வினைமுற்று. க, இய, இயர் என்னும் விகுதிகளைப்பெற்று வரும். o: உதாரணம் : உண்க. ஏவலுக்கும் வியங்கோளுக்கும் உள்ள வேறுபாடுகள் : ஏவல்-1. முன்னிலையில் மட்டும் வரும். -" " 2. ஒருமை பன்மை வேறுபாடு உண்டு. 3. கட்டளைப்பொருளில் மட்டுமே வரும். வியங்கோள்-1. இருதிணை ஐம்பால் மூன்றிடங்களிலும் வரும். 2. ஒருமை பன்மை வேறுபாடில்லை. 3. வாழ்த்தல், வைதல், வேண்டுதல் முதலிய பல பொருளில் வரும். தனித்தன்மைப் பன்மை வினைமுற்று ஒருவரே, தம்மைத் தாமே பன்மை வாய்பாட்டாற் கூறிக்கொள்ளும் வினைமுற்று. உதாரணம் , யாம் உமக்குப் பாடம் சொன்ைேம். சொன் னுேம் என்பது தன்மையிடம், பன்மைச்சொல், வினைமுற்றுச் சொல். ஆனல் கூறுவோர் பலர் அல்லர். ஒருவரே தம்மைத் தாமே அவ்வாறு கூறுகிருர். இவ்வாறு வருவது தனித் தன்மைப் பன்மை வினைமுற்று எனப்படும். உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று ; தன்மைப் பன்மை வினைமுற்று பிறரையும் உளப்படுத்தி வருமானுல் அஃது உளப் பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று எனப்படும். உதாரணம் : நானும் அவனும் சென்ருேம். இதில் சென்ருேம் என்ற சொல் ம்ற்றவரையும் உளப்படுத்தி நிற்கிறது. செய்யுளிசை அளபெடை : செய்யுளில் ஒசை குறையுமா.இல் (த்ளைகெட்டு வருமானல்) அவ்வோசையை நிறைப்பதற்காது நெட்டெழுத்துக்கள் அளபெடுத்து வரும். ஆ ள .ெ ப. இத் தமைக்கு அறிகுறியாக அதன் குற்றெழுத்துக்கள் அதனருகில் எழுதப்ப்டும். இஃது இசைநிறை அளபெடை எனவுஞ் சொல்லப்படும். உதாரணம் : தொழாஅர் எனின். இது "தொழார் எனின் என்றிருப்பின் ஒசை குறையும் (தளைகெடும்) அதனல் ஆ