பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணக் குறிப்புக்கள் ፰ኅ:) நேர் நேர் நிரை - தேமாங்கனி நிரை நேர் நிரை - புளிமாங்கனி நிரை நிரைநிரை - கருவிளங்கனி நேர் நிரை நிரை - கூவிளங்கனி வெண்பாவிற்குரிய தளைகள் : வெண்சீர் வெண்டளே, இயற்சிப் வெண்டளை என இருவகைப்படும். காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை. மாமுன் நிரையும், விளமுன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை. ஆசிரியப்பாவிற்குரிய தளைகள் : நேரொன்ருசிரியத்தளை, நிரை யொன்ருசிரியத்தளை என இருவகைப்படும். மாமுன் நேர் வருவது நேரொன்ருசிரியத்தலை. விளமுன் நிரை வருவது. நிரையொன் ருசிரியத்தளை. உதாரணம் : அகர முதல. அகர - நிரை நேர் - புளிமா முதல - நிரை நேர் - புளிமா. இங்கே மாமுன் நிரைவந்தமையால் இயற்சீர் வெண்டளை. எழுத்தெல்லா மாதி. எழுத்தெல்லா - நிரை நேர் நேர் - புளிமாங்காய் மாதி - நேர் நேர் - தேமா. இங்கே காய்முன் நேர் வந்தமையால் வெண்சீர் வெண்டளை. விண்பொரு நெடுவரை. விண்பொரு - நேர் நிரை - கூவிளம். நெடுவரை - நிரை நிரை - கருவிளம் இங்கே விளமுன் நிரை வந்தமையில் நிரையொன்ருசிரியர்தன உருட்டி வேரல் உருட்டி - நிரை நேர் - புளிமா வேரல் -நேர் நேர் - தேமா. இங்கே மாமுன் நேர் வந்தமையால் நேரொன்ரு சிரியத்தளை. எதுகை மோனே : எதுகையாவது, செய்யுளில் அடிகளிலாவது i களிலாவது முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெ ழுத்து ஒத்துவரத் தொடுப்பது எதுகைத் தொடை. உதாரணம். உடுக்கை. இடுக்கண். இங்கே முதலெழுத் துக்களாகிய உ , இ என்னுமிரண்டும் அளவொத்து நிற். இரண்டாமெழுத்து - டு ஒத்துவரத் தொடுக்கப்பட்டுள்ள மையால் எதுகை எனப்படும். முதலெழுத்து அளவொத்து வரவில்லையானல் எதுகை எனப்படாது. மோனையாவது, செய் யுளில், அடிகளிலாவது சீர்களிலாவது முதலெழுத்து ஒத்து வரத்தொடுப்பது மோகனத் தொடையாம். உதாரணம்: மலர் மிசை ஏகினன் மாணடி சேர்ந்தார் கனிச்சீர்