பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அறவுரை பொதுப்பொருளையும் உறுதிப்படுத்திக் கூறுவது வேற்றுப்பொருள் வைப்பணியாகும். அஃதாவது வேருெரு பொருளை வைத்து, தான் சொல்லக் கருதிய பொருளை உறுதிப்படுத்துவது. இச் செய்யுளில் சொல்லக் கருதிய பொருள் குல வித்தை கல் லாமல் பாகம்படும் என்பது. இது பொதுப்பொருள். இப்பொதுப் பொருளை உறுதிப்படுத்தச் சிறப்புப் பொருளாகிய சோழன் வர லாறு கூறப்பட்டது. தன் வாயால் கெடுதல் - பொல்லாத சொல்லி...........................கெடும் சொற்பொருள் நல்லாய்-பெண்ணே, ப ற் றி ப் .ெ பா ல் லாங் கு மணலுள் முழுகி - மணலுக்குள் சொல்லி, ளேயே பதிந்து, மறைந்து ஒழுகும் - கரந்து வாழ் மறைந்து கிடக்கும் - ஒ ளி ந் து கின்ற, வாழ்கின்ற, பேதை-அறிவிலான், துனலும்-தவளேயும், தன் சொல்லாலே - தான் சொல் தன் வாயால் கெடும் - தன் குர லும் சொல்லாலே, லைக் காட்டித் தன்னைத் தின் தன்னை துயர்ப்படுக்கும்-தன்னைத் னும் பிராணிகட்கு அகப்படும், துன்பத்தின்கண் அகப்படுக் (அதுபோல) கும். பொல்லாத சொல்லி - பிறரைப் கருத்து மணலுள் மறைந்து வாழும் தவளை தன் குரலைக் காட்டித் தன் னேத் தின்னும் பிராணிக்கு அகப்படுதல் போல் பிறரைப்பற்றிப் பொல்லாங்கு கூறித் திரியும் கீழ்மகனும் தன் சொல்லாலேயே கெட்டொழிவான். விளக்கம் இச் செய்யுள் கீழ்மக்கள் செய்கையை விளக்குகிறது. மணலில் தவளை மறைந்து கிடக்கும். அது சும்மா வாயை மூடிக்கொண்டிராமல் கத்தித் தான் இருக்கும் இடத்தைத் தானே காட்டிக்கொடுக்கும். அப்பொழுது இரைதேடித் திரியும் பாம்பு முதலியன தவளை இருக்கும் இடத்தை எளிதாகத் தெரிந்து வந்து அதைப் பிடித்து விழுங்கிவிடும். வாயை மூடிக்கொண்டிருந்தால் இந்தத் தொல்லை கிடையாது. மூடனும் இப்படித்தான் தன் வாயாலேயே கெடுகின் முன். புறங்கூறிப் புற்ங்கூறித் தன்னியல் பைத் தானே வெளிப்படுத்திக்கொள்கின்ருன். அதனுல் தீங்குகள் வந்தடைந்து, கேட்டுக்கு ஆளாகிருன். இதில் வந்துள்ள பழமொழி : தவளையும் தன் வாயால் கெடும் என்பதாகும்.