பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் o 91 பிள்ளைக்கு மிகுதியாகவும் பிறருக்குக் குறைவாகவும் வழங்குவர். என்னைப் பொறுத்தவரை அவ்வேறுபாடே கிடையாது. அனைவரும் என் பிள்ளைகள் என்று கருதியே சரிசமமாக நடத்துவேன். அவ்வுலகம் ஒரு தனி உலகம், இன்ப மயமானவுலகம். பள்ளிக்குள் நுழைந்து விட்டாற்புத்துணர்வு பெறுவேன். ஆசிரியர் மாணவர் - என்ற இருநிலைதான் என் மனத்தில் நிற்கும். கணேசன் என்ற தலைமை ஆசிரியர் மாணவர் ஒருவரைத் திட்டி விட்டார் என்பதற்காக ஒரு சமயம் மாணவர் மறியல் செய்தனர். தலைமையாசிரியர், பிற ஆசிரியர்கள் சொல்லியும் கேட்கவில்லை. பள்ளித் தாளாளர் தொலை பேசியில் என்னை யழைத்து நீங்கள் கட்டுப் படுத்துங்கள் என்றார். நான் மாணவரி டையே சென்று வகுப்பிற்குச் செல்லுமாறு பணித்தேன். "தலைமையாசிரியர் திட்டிவிட்டார்; வகுப்பிற்குச் செல்ல மாட்டோம் என்று அடம் பிடித்தனர். மாணவர் தலைவனைப் பார்த்து, ஏண்டா! ஒருநாள் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, செருப்பால் அடிப்பேன் என்று நான் திட்டினேனே, அப்போது வராத மானவுணர்ச்சி இப்பொழுது எப்படி வந்தது? என்றேன். நீங்க எங்க அப்பாமாதிரி திட்றீங்க' என்று கொஞ்சுதலாகச் சொன்னான். உணர்ச்சி வயப்பட்டுக் கண் கலங்கி விட்டேன். மாணவரும் கலங்கி விட்டனர். சரி, என்னை அப்பா மாதிரி கருதுவது உண்மை யானால் வகுப்பறைக்குச் செல்லுங்கள் என ஆணையிட்டேன். தலைமையாசிரியர் மன்னிப்புக் கேட்டால் செல்கிறோம் என்றனர். தலைமையாசிரியர் மன்னிப்புக் கேட்டால் அவர்க்குக் கீழே பணிபுரியும் நானும் மன்னிப்புக் கேட்டதாகத்தான் பொருள்படும். அதனால் நான் மன்னிப்புக் கேட்கவா என்றேன். அவ்வளவு தான் அனைவரும் ஒடி வகுப்பறைக்குள் புகுந்து விட்டனர். இவர்களை எண்ணும் பொழுதெல்லாம் இப்படிப்பட்ட நன்மாணாக்கரைப் பெற்றிருந்தோமே யென்று உருகி விடுவதுண்டு. 1965இல் நாடுதழுவிய இந்தியெதிர்ப்புப் போராட்டம் நடை பெற்றது. எங்கள் பள்ளி மாணவரும் வெளியில் நின்று மறியல் செய்தனர். உணர்ச்சிவயப்பட்டுக்கல்லெறிந்து குழப்பம் விளைத்தனர். காவலர் வந்து விரட்டி விரட்டித் துரத்தினர். இச்சூழ்நிலையைப்
பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/109
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
