பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 1 0 1 தடை செய்யப்பட்டிருந்தால் எவ்வளவோ நன்மையாக இருந்திருக்கும். அப்பேறு கிட்டவில்லை. + 1978 இல் பணியிலிருந்து விடுதலை பெற்றேன். ஆசிரியப் பணி ய யரிய பணிதான். மாணவர்களை நன் மக்களாக உருவாக்கும் பணிதான். தீமை செய்யாமல் நன்மை செய்தற்கேற்ற பணிதான். எனினும் என் இலக்கியப்பணிக்கு என் உரிமையுணர்வுக்குத் தடையாக இருப்பது போன்றவுணர்வு ஊடாடிக் கொண்டே யிருந்தது. அதனால் ஒய்வு பெற்றவுடன், மகிழ்வு பொங்கித் 'திறந்தன கதவுகள்' என்ற தலைப்பில் விடுதலைப் பாடல் பாடினேன். மிகுதியாக எழுதலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் கட் படலம் படர்ந்து, பார்வை மங்கி, எழுதவும் படிக்கவும் இயலாத நிலை ஏற்பட்டு விட்டது. எட்டாண்டுகளை விணே கழித்தேன். ஒய்வுச் சம்பளம் முந்நூறு கிடைக்கவில்லையென்றால் என் நிலையாதாகியிருக்குமோ? கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. ஆயினும் எவரும் என்னை வளமானவன் என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றனர். வறுமை தோன்றாமல் அரசன் போல வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்படி? நண்பர்களின்துணை தான். உடலுழைப்பாலோ, பொருளாலோ ஒருதவியும் எவர்க்கும் செய்தறியேன். எனினும் ஏன் எனக்கு இப்படி உதவுகிறார்கள்? என் நெஞ்சிற் கொலுவிருக்கும் என் தமிழன்னைதான் விடை தர வேண்டும்!