பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[T அன்புப் பார்ப்புகள் குமுதம் திருமணம் நான்கலப்புமணம்செய்து கொண்டதுபோலவே என்மக்களுக்கும் கலப்பு மணம் செய்து வைக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தேன். சாதியை ஒழித்து விடலாம் என்ற நம்பிக் கையில்தான் அப்படி உறுதி பூண்டேன். என் மூத்த மகள் புலவர் குமுதத்துக்கு மணமகன் தேடும் பொருட்டுப் பலரிடமும் சொல்லி வைத்தேன். வை.சு. மஞ்சுளா பாய் அம்மையாரிடமும் சொல்லியிருந்தேன். சாதி ஒழியவேண்டும் என்று மேடைதோறும் பாடி வந்த ஒருவரின் மகள் விட்டில் மணமுடிக்கக் கருதி, அம்மையார் தொடர்பு கொண்டார். நம்ம சாதியிலேயே பாருங்கள் என்று அவர்கள் சொல்லி விட்டனர். இதையறிந்து ஏமாற்றத்துக்கு ஆளானேன். இருப்பினும் தளரவில்லை. புதுக்கோட்டையைச்சார்ந்த கொப்பனாபட்டி என்ற ஊரில் என் தலைமையில் ஒரு சீர்திருத்தத்திருமணம் நடைபெற்றது. அப்பொழுது சாதிப் பிளவுகளைக் கண்டித்துப் பேசிவிட்டு, என்மகள் கதையையும் கூறி, என் மகளுக்குக் கலப்பு மணந்தான் செய்வேன். மணமகன் கிடைக்கவில்லையென்றால் என் மகளைக் கிணற்றில் எறிந்து கொல்வேனே தவிர, ஒரு சாதிக்குள் செய்து கொடுக்க மாட்டேன் என்று உணர்ச்சி வயப்பட்டுப்பேசி விட்டேன். பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றேன். தற்செயலாக இராம. கலியாணசுந்தரத்தைச்சந்தித்தேன். முடியரசன்! இங்கே ஒரு மணமகன் பார்த்திருக்கிறேன். புலவர் அன்பு. கணபதி, எம்.ஏ., பி.எட்., என்ற தமிழாசிரியர் இருக்கிறார்;