பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 மாதவனும் வந்திருந்தார். எங்களை நன்றி கூற விடாமல், அமைச்சராக இருந்த அன்பில் தருமலிங்கம் நன்றி கூறினார். அப்பொழுது, கழகம் ஒரு குடும்பம் என்பது மெய்ப்பித்துக் காட்டப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோளையும் மறுத்து, மரபிலிருந்தும் நெகிழ்ந்து, கலைஞர் என் வேண்டுகோளை ஏற்று வந்து மகிழ்வித்த பெருந்தன்மை, என்பால் வைத்துள்ள ஈடுபாட்டை எண்ணியெண்ணி மகிழ்கிறேன். சீரும் சிறப்புமாக நடைபெற்ற இத்திருமண நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றோர், அமைச்சர்கள் பேசும் பொழுது என்பாற் கொண்ட அன்பைப் புலப்படுத்தியதைக் கேட்டோர் ஒரு கதை கட்டி விட்டனர். திருமணச் செலவு முழுமையும் கலைஞர் ஏற்றுக் கொண்டதாகவும், மேலும் இருபத்தையாயிரம் உரூபாவுக்குக் காசோலை எனக்களித்தாகவும் செய்தி பரப்பப்பட்டது. ஆனால் நடந்தது வேறு. கலைஞர் தலைமையில் திருமணம் நடந்தமையால் ஆட்சிகலைக்கப்பட்டவுடன் குமுதம் கணவன் பாண்டியனுடைய வேலை பறிக்கப்பட்டது தான் மிச்சம். திருமணச் செலவைக் கலைஞர் ஏற்றுக் கொண்டார் என்பதும், காசோலை தந்தாரென்பதும் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், திருமணத்துக்காக நான் பட்டது எனக்குத்தானே தெரியும்? கையிற் காசில்லாமல்தான் திருமணத்துக்கு முடிவு செய்தேன். என் நண்பர் களுக்கு மடல் எழுதினேன். பணம் இவ்வளவு வேண்டும். உடனே கேட்பு வரைவோலை (டிராப்ட்) எடுத்து அனுப்புக என்றெழுதினேன். பணிந்துதான் எழுதிக் கேட்க வேண்டும். அதைவிடுத்து உரிமையுடன் எழுதினேன். ஆனால் அவரவர் தகுதிக்கேற்பத் தொகையும் குறித்து எழுதினேன். எவருமே மறுக்கவில்லை. உடனுக்குடன் வந்து சேர்ந்தது. சிலர், 'உங்கள் உத்திரவுப்படி பணம் அனுப்பியுள்ளோம் என்று எழுதி யிருந்தனர். அவர்கள் செய்தது, காலத்தாற் செய்த உதவி புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார், ஈரோட்டு சு.அ. நடராசன், சீர்காழி ந.துரைராசன், கும்பகோணம் பி.வி. நாதன், பாம்பே ஆனந்தபவன்' உரிமையாளர் ஆனந்த குமார் வலம்புரி என்.எம். அண்ணாமலை, திரைப்பட இயக்குநர், சுப. முத்துராமன். 'அண்ணா எவர்சில்வர்' உரிமையாளர் செந்தில், பழ. கருப்பையா போன்றோர் நல்கிய