பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 அன்புள்ள கவிஞர் அவர்களுக்கு, தங்கள் செல்வன் பாரியின் மணவிழா அழைப்பு கிடைத்தது. மகிழ்ச்சி. நான் வரஇயலாமைக்கான காரணங்களை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். மணமக்கள் வளமெலாம் பெற்று வாழ்ந்திட இதயமார்ந்த வாழ்த்துகள். அன்புள்ள, மு. கருணாநிதி 25.卫多。55 குறிப்பு : மணவிழாஅழைப்பில் சாதி பேதம் நீக்கிட அண்ணா கூறிய மொழிகளும் இடம் பெற்றிருக்கலாம். நான் ஒவ்வொரு திருமண அழைப்பிதழிலும் சாதி வேற்றுமை கூடாது என்பதற்குப் பலர்தம் பொன் மொழிகளை அச்சிடுவது வழக்கம். அம்முறைப்படி, இவ்வழைப்பிதழிலும் வள்ளுவர் முதல் பெரியார் வரையிலுள்ள பெரு மக்கள் வாய் மொழிகளை வெளி யிட்டிருந்தேன். அண்ணாவின் மொழிகள் இடம் பெற வில்லையே எனக் கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். நம் திராவிட இயக்கத்தின் சார்பில் ஐயாவின் மொழிகளை வெளியிடின் அனைவரும் அதனுள் அடங்குவர் என்ற கருத்தில் அவ்வாறு வெளியிட்டேனே தவி வேறொன்றும் இல்லை. எப்படியோ என் மக்கள் மூவருக்கு என் கொள்கைப்படி கலப்பு மணம் செய்து வைத்து விட்டேன். எஞ்சிய மூவருக்கும் (குமணன், செல்வம், அல்லி) அவ்வாறே செய்து விடின் என் இல்லத்தில் ஆறு சாதிகளைச்சார்ந்தோர் இருப்பர். அவர் யாவருங் கேளிர்ஆகிவிடுவர், சாதியை நாட்டில் ஒழிக்க முடிய வில்லையே என்ற ஏக்கம் இருப்பினும் என் வீட்டிலாவது சாதி ஒழிந்ததே என்ற பொந்திகை (திருப்தி)யுடன் இருப்பேன். பொதுவாக என் மக்கள் நல்லவர்தாம். எனினும் என்னியல்பு களுக்கு முழுவதும் ஒத்துப் போகார் ஆம்; நான் ஆத்திசூடி கற்றுத் தந்த திண்ணைப் பள்ளியிற் படித்தவன். அவர்களோ அறிவியல், ஆங்கிலங் கற்றுத்தந்த பெரிய கட்டடங்களிற் படித்தவர்கள். இரு தன்மையும் ஒத்துப் போவது அரிதுதானே!