பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 133 போகலாம் என்றார். ஏறியதும் மகிழுந்து புறப்பட்டது. கயல்தினகரனும் டனிருந்தார். அவர், கலைஞரின் அன்புக்குரியவர். கலைஞர் மலர்ந்த முகத்துடன் பல செய்திகள் சொல்லிக் கெண்டே வந்தார். கூட்டங்களுக்குச் செல்வது, அங்கே நடப்பது, அரசின்திருவிளை பாடல்கள் முதலியன பேச்சில் இடம் பெற்றன. வழக்கு! வழக்கு! என்று ஒரு நாளைக்கு எத்தனை வழக்கு! இப்பொழுது கூட அது சம்பந்தமாகத் தான் போகிறேன்' என்றவர், திடீரெனப் பேச்சை நிறுத்தி, ஆமா நீங்கள் என்ன வேலையாக வந்தீர்கள்? அது தெரியாமல் பேசிக் கொண்டே வருகிறோமே! எங்கே போக வேண்டும்? கொண்டு போய் விடுகிறேன்' என்றார். பாடநூல் தொடர்பான கூட்டத்திற்கு வந்தேன். உங்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலால் இன்று இங்கு வந்து விட்டேன். அரசின் செலவிலேயே உங்களையும் பார்க்க வந்தேன். போக வேண்டிய இடத்திற்கு வண்டிபோகட்டும் என்று கூறிச் சிரித்தேன். அடஅட! உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடப் போகிறது!’ எனக் கூறி ஒரு வெற்றிலை வாணிகர், தமக்கு விருந்தளித்தமைக்காக அவ்வணிகருக்கு அரசு தந்த தொல்லைகளைக் கூறினார். 'வந்தால் வரட்டும் என்று நான் கூறி முடிக்குமுன் வண்டி ஒரு வீட்டில் நின்றது. அது பாளையங்கோட்டை வழக்கறிஞர் சண்முகம் வீடு. கலைஞர் இறங்கி நான் வருகிறேன். நீங்கள் போய் வாருங்கள், கவிஞர் என்று உள்ளே சென்றார். எதையும் பொருட் படுத்தாமல் ஏன் கலைஞரைக் காணச் செல்ல வேண்டும்? இத்தமிழினத்திற்குத் தமிழ் நாட்டிற்குக் கலைஞர் கருணாநிதியும் திராவிடர் கழக வீரமணியும் தேவையென மறுதியாக நம்புவதால் அத்துணிவு வந்தது. வலிய வந்த வழக்கு 1979 ஆம்ஆண்டு, எதிர்பாரா வகையில் சென்னை உயர்-முறை மன்றத்திலிருந்து (ஹைகோர்ட்) ஒர் அறிக்கை எனக்கு வந்தது. முறை மன்றத்தை அவமதித்ததாக அரசு வழக்கறிஞர் என் மீதுவழக்குத் தொடர்ந்திருந்தார். எனக்கு ஒன்றுமே விளங்க வில்லை. நமக்குத் தொடர்பில்லாத செய்தியாக இருக்கிறதே! என்று கலங்கி விட்டேன். நான் இதற்கு முன் எவ்வழக்கும் அறியேன். எதிர் வழக்காடற்கேற்ற