பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கவியரசர் முடியரசன் படைப்புகள் பொருள்வளமும்பெற்றிலேன். அறிக்கைக்குப்படியெடுத்துநான் நாளையுங் குறித்து மடலொன்றும் எழுதிக் கலைஞருக்கு விடுத்தே குறித்த நாளிற் சென்னைக்குச் சென்று கட்சி அலுவலகத்து நுழைந்தேன். என் மடல்ை மேசையின் மேல் வைத்துக் கொண் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் கலைஞர். ஏன் இவ்வ நேரம்?' என்று வினவி விட்டு விவரங் கேட்டார். நான் எந் விவரத்தைச் சொல்வது? ஒன்றும் தெரியாதென்றேன். கூட்டத்தி ஏதாவது அவமதித்துப் பேசினர்களா?' என்றார். இல்லை யென்றேன். கவிதையில் ஏதேனும் குறை கூறிப்பாடியிருக்கிறீர்களா?' என்றா சில ஆண்டுகளாகக் கவிதையே எழுதவில்லையென்றேன். கொண்டார். மறு மொழியில்லை. அச்சமயம் பேராசிரிய அன்பழகன் வந்தார். பொருளாளர் சாதிபாட்சாவும் அங்கிருந்தார். 'இங்கே பாருங்கள்! நம்ம கவிஞர் நல்ல மனிதர்; இவரை வம்புக் கிழுக்கிறது அரசு, பாளை. சண்முகத்துக்குப் ஃபோன் செய்தேன். அவர் வீட்டில் இல்லை என்று சாதிக்கிடம் சொல்லி விட்டு மீண்டும் கலைஞர், தொலைபேசியிற் பேசினார். பேராசிரியர் அன்பழகன், அடே! எடுத்த எடுப்பிலேே முடியரசன் பெரிய வழக்கைச்சந்திக்கிறாரே என்று நகையாடினார். அவர்அரசியலில் பல வழக்குகளைச் சந்தித்தவர். நகைச்சுவையாகப் பேசினார். எனக்கு இது முதல் வழக்கு; இன்னதென்று புரியா வழக்கு. என் நடுக்கம் எனக்குத் தானே தெரியும். சிறிது நேரத்தில் என்.வி.என். சோமு வந்தார். அவரிடம் அந் அறிக்கையைக் கலைஞர் கொடுத்து, இதன் விவரம் தெரி கொண்டு வாருங்கள் என்று சோமுவிடம் கொடுத்தார். மறுநா காலை அலுவலகம் சென்றேன். சோமு, மகிழுந்தொன்றில் வந்து என்னையழைத்துச் சென்றார். செல்லும் பொழுது என்னிடம் உண்மை கூறுமாறு வினவினார். 'நீதிபதி இஸ்மாயிலுக்கு நீங்கள் ஏதாவது கடிதம் எழுதினர்களா?! என்றார். அவரை எனக்குத் தெரியவே தெரியாது. நான் எழுதவும் இல்லை - என்றேன். நேற்று கோர்ட்டுக்குச் சென்று விவரங்களைத் தெரிந்து கொள்வதற்குள் கலைஞர், இரண்டு முறை ஃபோன்