பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 1 5 I தழுவி, எழுதி 'வீரகாவியம்’ எனப் பெயரிட்டேன். இதனைப் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார், தமது வள்ளுவர் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுதவினார். இந்நூலும் தமிழக அரசின் பரிசில் பெற்றது. இந்நூலை, கோபிச் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த நஞ்சக் கவுண்டன் பாளையத்திலுள்ள நஞ்சப்பக் கவுண்டர் இல்லத்தி லிருந்து எழுதி முடித்தேன். பெரும் பரப்புள்ள ஒரு தோட்டத்தின் நடுவில் அமைந்துள்ளது அப்பேரில்லம். வணக்கத்திற்குரிய வேலம் மையார் அவர்கள் தந்த சுவையுணவும் அவர்தம் மக்கள் காட்டிய பரன்பும் பதினெட்டு நாளில் அக் காப்பியத்தை முற்றுப் பெற மவைத்தன. அரை மணி நேரத்திற்கொரு முறை, அம் மூதாட்டியார், நான் எழுதிக் கொண்டிருக்கும் இடந்தேடி வந்து, குளம்பி (காபி) தருவார்கள். என் உடல் நலங்கருதி, அதற்கேற்ற உண்டியும் அறிவுரையும் வழங்கித் தாயன்பு காட்டுவார். வெண்ணெய் நல்லூர்ச் சடையன் தந்த சோற்றுச் செருக்காலன்றோ, கம்பன் அத்துணைச்சிறந்த பாடல்களைப் பாடியிருக்கிறான்! என்ற உண்மையை அப்பொழுது உணர்ந்து கொண்டேன். என் வரலாற்று நூலைக் கூட, ஈரோட்டிலிருந்துதான் எழுதிக் கொண்டிருகிறேன். நட்பாக அரும்பி, மைத்துனக்கேண்மையாக மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும் பேரன்பர் சு.அ.நடராசன் இல்லத்தில்தான் எழுதிக் கொண்டிருகிறேன். வெந்நீர் வைத்துக் கொடுத்தல், துணி துவைத்துக் கொடுத்தல் போன்ற அனைத்து உதவிகளும் செய்து தருகிறார் கடைக்கு வந்த நண்பர் ஒருவர். அவரை அழைக்கிறார். இருங்க, இந்தக் குழந்தைக்கு வேண்டிய தெல்லாம் செய்து கொடுத்து விட்டு வருகிறேன்' என்கிறார். 67 அகவை நிரம்பிய என்னைக் குழந்தை யாகக் கருதித் துணை செய்கிறார் எனில் அவர்தம் அன்புள்ளத்தை என்னென்பேன்? பாவலர் ஈவப்பனார் என்னைக் காண வந்தார். எனக்கு நடராசன் செய்யும் உதவிகளை யறிந்து, அவரை நோக்கி நீங்கள் பேறு பெற்றவர்கள் என்று வியந்தார். அதெல்லாம் எனக்கு ஒண்னுந் தெரியாதுங்க; 40 ஆண்டா அவர் எனக்கு நண்பர்; நண்பர் என்ற முறையில் செய்கிறேன்' என்று நடராசன் மறுமொழி பகர்ந்தார்.