பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 மேகாலாயாவைச் சேர்ந்த சில்லாங்கு என்னும் நகரில் வருமான வரித் துறை ஆணையராக இருக்கும் கிட்காரி என்பார், இந்திய மொழிகளில் உள்ள பாடல்களைத் தொகுத்து மகிழ்வதை ஒரு பொழுது போக்காகக் கொண்டு மகிழ்கிறார். அவ்வம்மொழிப் பாடல்களை அவ்வம் மொழியிலேயே பாடலாசிரியர்தம் கையால் எழுதப்பட்ட இரு பாடல்களைத் தமக்கு விடுக்குமாறு வேண்டினார். என்னையும் வேண்டினார். 'எப்படிப் பொறுப்பேன்?' என்ற பாடலையும் மீண்டும் வருமா? என்ற பாடலையும் 30.4.73 எழுதி உய்த்தேன். .تقلی பெற்றுக் கொண்ட அவர் எழுதிய மடலின் மொழி பெயர்ப்பு: “உங்கள் உடல் நலம் குன்றியிருப்பதறிந்து வருந்துகிறேன். இப்பொழுது இலக்கியப் பணி செய்து நிண்ட நாள் வாழ, இறைவன் அருள்வாராக என இந்திய மக்களின் சார்பில் வேண்டுகிறேன்.”