பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[I72] கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 இனி, உருசிய நாட்டுத் தமிழறிஞர் செம்பியன் எனப் பெயரி சூட்டிக் கொண்டவரும் ஆன ரூதின் என்பார். ஈரோட்டு நண்பர் சீ.ப.சுப்பிரமணியத்துக்கு எழுதிய மடலிலிருந்து ஒரு பகுதி அப்படியே கீழே தரப்படுகிறது: இலெனின் கிராது 26-1-61 4, 4, 4 *్య• ** ** ■ ■ ■ ■ ■■ 睡 ■■ ■■■ முடியரசன் கவிகள் பலவற்றையும் இன்றே படித்துச் சுவைத்தேன். மொழியாய்வாளனாகிய என் மனத்தைக் கவர்ந்தது அவர் மொழி, அவர் நடை. துாய்மையாயிருந்த போதிலும், 'தொன்மைநாடி நன்மை விடும் முறையில் இயற்றியதல்ல அவர் கவிதை........ .” தங்கள் செம்பியன் (S.G. RUDIN) ஆ ஆ ஆ *్మ* *్మ* ** தோழர் செம்பியன் என்பாடல்களைப் பாராட்டினார் என்பதை விடத் தமிழ் மரபு கெடாமல் தமிழில் அழகாக எழுதினார் என்பதே எனக்கு இன்பந்தந்தது. லெனின் கிராடு என்பதை இலெனின் கிராது என எழுதியிருப்பதை நம் நாட்டுத் தோழர்கள் மனங்கொள் வாராக. தாங்கள் ஒய்வு பெற்ற நிலையில் நோய்வாய்ப் பட்டிருப்பது எனக்கு வேதனையளித்தது. தங்களை நான் நேரிற் கண்டே னில்லை. தங்கள் புகைப் படமும் கண்டிலேன். என்றாலும் தங்கள் பெயரை மட்டும் 1951 முதலே அறிவேன் அப்பொழுது 'பொன்னி’ இதழில் முதலில் தங்கள் கவிதையைக் கண்டேன். படித்தேன் களித்தேன்’ அ.லூர்து சாமி, திண்டுக்கல் -26-4-85