பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 183 பகுத்தறிவுப் பூங்காவில் புரட்சிமலர் பூத்திடவும் காஞ்சித் திருமகனின் கருத்துவழி காத்திடவும் கலைஞர் காட்டும் வழிப் பயணத்தில் மாறாமல் தனிவாழ்வில் புயற்காற்றும் பொதுவாழ்வில் புலிக்குணமும் பெருமையுடன் தான்கொண்டு பத்தரைப் பொன்னணியாய் ஒளிர்ந்து வரும் சுடர்விளக்கே உனக்கிந்நாள் மணிவிழா சொல் வீரம் காட்டாத செயல்மறவன் நீயேதான்! வயதென்ன உனக்கு? வாலிபன் நீ மனவளத்தால் மனந்தளராக் கவிவேந்தே மாதமிழின் காவல் நீ தளர்ச்சி உனக்கில்லை தாய்த் தமிழைக் காக்கும் வரை இன்பத் தமிழ்ப்படையாம் இலக்கிய அணியென்றும் நீயாத்த கவிதைகளை நித்தம் சுமந்துவந்து நிரந்தரமாய்ப் புகழ் சேர்க்கும் காரைக் குடி வாழும் காவியக் குயிலேநீ குந்திக் குரலெடுத்துக் கூவிடுக பல்லாண்டு வாழுங் கவிஞர்களில் வற்றாத நதிநீயே, வாழ்விலும் நீபெற்ற ஈரோட்டுப் பேரறிவும் காஞ்சிப் பள்ளியதன் புகழ்காக்கும் பெரும்பொறுப்பும் உன்னிதயச் சொந்தங்கள்; உனக்குநிகர் காட்டுதற்கு ஒரு பெயரே நானறிவேன் ஒப்பில்லா அப்பெயர்தான் ஒங்குபுகழ் 'முடியரசன்' நிறைவாழ்வும் நீடுபுகழ் நெஞ்சத்தாற் பெருவாழ்வும் உன்மனையில் குவிந்திருக்க உயர் தமிழே வாழ்க வாழ்க! நெஞ்சம் திறந்துன்னை நிறைவோடு வாழ்த்துகிறேன். ச.அமுதன் ஆ ழ் ஆ ** *్మ* *్మ* 'குறளியம்’ என்ற ஏட்டில் 'பொய்த்தவாய்மொழி போதும், என்னுந் தலைப்பில் வெளிவந்த என் பாடலைக் கண்டு களித்துச் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த செந்தமிழ்க்கொண்டல் இர.திருஞானசம்பந்தர் என்பார் எழுதிய பாடல்: ‘உலகம் போற்றும் உயர்தமி ழதனை நிலவச் செய்யும் நீள்புகழ்ப் பாவல!