பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப்பறவையின் வாழ்க்கைப்பயணம் 185 தமிழண்ணல். சிலவினாக்கள் வினவினார். விடைகளைக் கேட்டுக் கொண்டு நீண்ட கட்டுரை வரைந்து வெளியிட்டார். அதிலிருந்து லெ பகுதிகள்: m முடியரசன் பாரதிதாசனை வழிகாட்டியாகக் கொண்டுள்ள முற்போக்குக் கவிஞர்.ஆம், வழிகாட்டியாகக் கொண்டுள்ளவர் என்று சொன்னேன். அவரைப் பார்த்து எழுதுகிறவர் அல்லர், முன்னோர் வழி நின்று தனிப்போக்கில் தனிப்பாங்கில் தமிழ் மரபுக்குக் கட்டுப்பட்டுக் கவிதையெழுத வேண்டுமென்பதே அவர் கொள்கை. முடியரசன் கருத்துக் கருவூலமாகக் காட்சி தருகிறார். இயற் கையினைப் பாடும்போதும் அவருக்கு மொழியுணர்ச்சியும் புதுமைக் கருத்துகளுமே மேலோங்கி நிற்கின்றன. அதனால் இவரைப் புதுமைக் கவிஞர் எனலாம். ■ முடியரசன் விரைவாகவும் எளிமையாகவும் பாடுகிறார். காரில் செல்லுகையிலும் கால் நடந்து உலாவுகையிலும் பந்தாடும் போதும் பலருடன் அரட்டையடித்துக் கொண்டிருக்கும் போதுங் கூட அவரால் பாடமுடிகிறது. ஆனால் ஒன்று. அவர் மனநிலை சரியாக இருக்க வேண்டும். பெரும்பாலும் அடித்தல் திருத்தலின்றிப் பாடுவார். பாடியபின் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொற்களை மட்டுமே மாற்ற முனைவார். நண்பர்களிடம் பாடிக் காட்டித் திருப்தி தருகிறதா என ஆய்வார். சிலர் கவிதை பாடும் போது 'பிரசவ வேதனைப்" படுவதுண்டு. முடியரசனுக்கோ எண்சீர் விருத்தம், வெண்பா, அகவல் முதலிய பாவகைகள் பாடுங்கால் வேதனைப் பட்டதாகவே அறிந்ததில்லை. ■ ஒரு பாடல் விறுவிறுப்பேறும்: கருத்து மிகும்; சொற்கள் வளம் பெறும்; அவர் முகமும் மலரும். உள்ளம் உவகையூற்றின் உச்சியிலே களித்துக் கிடக்கும். இதைப் பார்த்த பிறகுதான் அவரை உண்மையிலேயே கவிஞரெனக் கூற என் மனம் ஒப்பியது. அவர் மேடை ஏறித் தோற்றது கிடையாது. முடியரசன் கவிதைகளைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கருத்துப் பொலிவு, சுவை மலிவு, எளிய