பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 'பல்வகை உலகத்தில் வளரக் கெடும், காவலும் களவும்: ஆகிய இரண்டு கவிதைகளும் உவமையுடன் கூடிய உயர்ந்த கருத்தை விளக்கும் சிறந்த பாடல்கள். இவைகள் அவருடைய தனித் தன்மைக்குச் சிறந்த சான்றுகளாகும். ஒட்டு மொத்தத்தில் கவிஞர் பாரதிதாசன் பரம்பரையில் தலை சிறந்தவர் கவிஞர் முடியரசன் என்பது ஐயமில்லை. பாரதிதாசன் அவர்கள் தனது முதல் கவிதைத் தொகுப்பின் மூலம் எப்படிப் புரட்சிக் கவிஞராக மலர்ந்தாரோ அது போலக் கவிஞர் முடியரசன் அவர்கள் தனது முதல் தொகுப்பின் மூலம் சிறந்த கவிஞராக மலர்கிறார். அவருடைய பார்வையில் சில கோணல் மாணல்கள் நேர்ந் திருந்த போதிலும் மாற்றமுடியாத சமூக நியதியான பொதுவு டைமை என்கிற இலட்சியத்துக்கு முரணாக அவருடைய பேனா ஒரு வாக்கியத்தைக் கூட நானறிந்த வரையில் அவருடைய கவிதைக் தொகுப்புகளில் எழுதியிருக்கவில்லை. அந்த வகையில் கவிஞர் நம் முன் மிக உயர்வாகவே காட்சியளிக்கிறார். கவிஞரின் படைப்புகள் பழைய வேகத்தில், புதிய உணர்வில் வெளிப்படவேண்டும். எதிர்காலம் மிகப் பிரகாசமாகக் காத்துக் கிடக்கிறது. ஏற்பதும் துறப்பதும் கவிஞரின் விருப்பம். கவிஞரிடத்தில் எல்லோர்க்கும் கிடைத்தற்கரிய கவித்துவம் என்கிற வாள் கிடைத்திருக்கிறது. அதை எப்படி வேண்டு மானாலும் சுழற்றலாம். சுழற்றக் கூடிய முறையில் சுழற்றினால் தான் போர்க்களத்தில் வெற்றி கிட்டும். வீரன் என்கிற புகழும் கிடைக்கும் இல்லையேல்............! நம் விருப்பமெல்லாம் கவிஞரின் தேக்கநிலை உடைபட்டு, மேலும் மேலும் என்கிற சத்தியத்தின் இயக்க நிலையை எதிர் பார்க்கிறது. வரவேற்கிறது. பின்குறிப்பு: இக்கட்டுரை 1-8-63ல் எழுதப்பட்டது. அந்தக் கால கட்டத்துக்குப் பின்னர் தி.மு.க. தனது உயிர் மூச்சான திராவிட நாடு பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது.