பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 255 இது யார் எழுதினது? என்று அதட்டினார். மதிப்புரை பெற வந்தவர், நூலாசிரியர் பெயரைக் கூறினார். "எவன் எழுதினா லென்ன? எழுதியிருக்கிற அழகுக்கு மதிப்புரை வேறு வேண்டுமோ? என்று தாளைத்துக்கி எறிந்துவிட்டார். தமக்கு வேண்டியவர் என்று கூடப்பாராமல் இவ்வாறு கடிந்து கொண்டார். கவிஞருக்குத் தமிழின் நலந்தான் முதன்மையே தவிர, வேண்டியவர் வேண்டாதவர் என்பது பற்றிக் கவலையில்லை. மற்றொரு சமயம் பாவேந்தருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது அக்காலை வெளி வந்து கொண்டிருந்த கவிதைகளைப் பற்றிச் சில கருத்துகளை வெளிப்படுத்தினார். 'டீல் விட ஆசைப் படுகிறான்; ஆனா, சின்ன நூல் கண்டை வச்சிக்கிட்டு டீல் விட ஆசைப்படுகிறான். நூல் கண்டு பெரிசா இருக்கனுமேன்னு கவலைப்படமாட்டேங்கிறான்' என்று கூறினார். இளமையில் காற்றாடிக் கலையில் வல்லவராதலின், கவிதை புனைவார்க்கு அந்த ம வமை வாயிலாக அறிவுரை கூறியிருக்கிறார் என எண்ணி மகிழ்ந்தேன். இலக்கியப் படைப்பில் ஈடுபடுவோர்க்கு இது நல்ல அறிவுரை. நூல் கண்டு பெரிதாக இருந்தால்தான் காற்றாடி உயரத்தில் பறக்கும். மற்றவருடன் போட்டி போட்டு வெற்றி பெறவும் முடியும். சிறிய கண்டாக இருப்பின் மற்றவருக்கே வெற்றி கிட்டும். அதுபோலப் பிறரினும் மேம்பட்ட கவிஞனாகி வெற்றி வாகைசூட வேண்டுமெனில் போட்டி மனப்பான்மையுடையவன், நிறைந்த நூலறிவு பெறுதல் வேண்டும் என்பதை அவ்வாறு சுட்டியிருக்கிறார். காற்றாடிக்காரன் வெற்றி பெற நூலறிவு மிகுதியாக வேண்டும் என்பது பாவேந்தருடைய உள்ளக்கிடக்கை. குழந்தை மன்ங் கொண்டவர் காரைக்குடி அருகில் உள்ள கானாடுகாத்தான் என்னும் ஊரில், வை. சு. சண்முகம் செட்டியார் என்னும் பெருமகனார் வாழ்ந்தார். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். குறுநில மன்னர் போன்ற தோற்றமும் குரலும் உடையவர். கவிஞர் பலருக்கும் பல்லாற்றானும் உதவி செய்யும் இயல்பினர். அவர்தம் இல்லம் அரண்மனை போல இருக்கும். அதற்கு இன்ப மாளிகை என்று பெயர். அவர்க்கு எதிரே சிறிய மேசை இருக்கும். அதன்மேல் மணி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும். பெரிய வீடாதலின்