பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 273 'இல்லை இல்லை நீங்கள் நினைப்பது அரசியல்வாதியை. இவர் பாடியது அரசியல் அறிஞரை (Statesman). அஞ்சுதற் கொன்றும் இல்லை எனத் தலைவரும் ஆங்கிலத்தில் விளக்கம் தந்தார். செங்கோட்டுக் கந்தப்பன் திருச்செங்கோட்டில் கண்ணகி விழா மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது. பேராயக் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காளியண்ணன் என்பார்அதனை நடத்தி வந்தார். அவர் உயர்ந்த மனிதர். வியக்கத்தக்க பண்பாளர், ஆண்டுதோறும் நானுங் கலந்து கொள்ளுவன். ཟླ།། கவியரங்கிற்கு ஒருமுறை சென்றிருந்தேன். கவியரங்கத் தலைவர் கி.வா. சகன்னாதன் அவர்கள். கோவலன் பிரிவில் கண்ணகி’ என்பது என் பாடல்தலைப்பு. நான் பாடத் தொடங்கி, (திருச்) செங்கோட்டை நம் கோடாகச் செய்த கந்தப்பா! வணக்கம் என்று தொடங்கினேன். இரண்டு மூன்று தடவை திரும்பத் திரும்பப் பாடினேன். மூன்றாம் முறை கூறும் பொழுதுதான் என் குறிப்பை அவையோர் விளங்கிக் கொண்டனர். தலைவர் திகைக்கிறார்; அருகிலிருந்த சிலம்பொலி செல்லப் பனாரிடம் என்ன முடியரசன் கந்தனுக்கு வணக்கம் சொல்கிறார்! அதுவும் இரண்டு மூன்று முறை திருப்பித் திருப்பிச் சொல்கிறார்! என்ன சங்கதி?” என்று வினவுகிறார். ‘அண்மையில் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற கந்தப்பனை மனத்திற்கொண்டு அவ்வாறு பாடுகிறார்” எனச் செல்லப்பனார் விளக்கம் தந்தார். பிரிவில் வாடும் கண்ணகி, அழுதழுது சிவந்த கண்ணளாகி விட்டாள். கோவலனுடன் உறையும் பொழுது கருப்பாக இருந்த விழி சிவந்துவிட்டது. இவ்வாறு கருப்பும் சிவப்பும் கலந்த கண்கள் கண்ணகியின் கண்கள் பேராயக் கட்சிக்காரர் நடத்தும் விழாவில் கருப்பும் சிவப்பும் கலந்த கொடி நினைவூட்டப்பட்டது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் காளியண்ணன் அவர்கள் பெருந்தன்மையைச் சுட்டவே. இஃது இலக்கிய விழா. வருவோர் புலவர். அவர்கள் கருத்தை அவர்கள் சொல்கிறார்கள். இதில்