பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 279 தீயால் ஏற்பட்ட நட்பு தீய நட்பு - என இரு பொருள்படக் கூறிய நயத்தை நினைந்துமகிழ்ந்தேன். யானையும் கோழியும் பறம்பு மலையில் நிகழ்ந்த பாரிவிழாவில் (1966) கவியரசு என எனக்கு விருது வழங்க அடிகளார் அழைத்திருந்தார். சென்றிருந்த பொழுது கவிதை வடிவில் நன்றி கூறுக’ என அங்கிருந்த சாமி. பழனியப்பன் கூறிவிட்டார். தாளும் எழுது கோலும் வாங்கிக் கொண்டு அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டு எழுதிக் கொண்டிருந்தேன். ஐந்தாறு பாடல்கள் எழுதிவிட்டேன். அப்பொழுது திடீரென்று சிறுவது போன்ற ஒரு பேரிரைச்சல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். கட்டப்பட்டிருந்த யானை என் கண்ணிற் பட்டது. விரைந்து எழுந்தேன். அதற்குள் கோழியொன்று யானைக்கருகே வர மீண்டும் பிளிறல், யானையென்றால் இன்னும் அஞ்சுவேன். கதறும் களிற்றைக் கண்டால் கவிதையா வரும்? அவ்வளவுதான் மூச்சு வாங்கஒடினேன். கோழிக்கு யானை அஞ்சியது. யானைக்கு யான் அங்சினேன். அஞ்சிய நெஞ்சில் அரும்புமா கவிதை? பாடல்நின்று விட்டது. வணங்கா முடியரசன் தருமபுரத்தில் திருமடத்தின் சார்பில் வள்ளுவர் ஈராயிரத் தாண்டு விழாக் கவியரங்கம் தலைவர் மு. ரா. பெருமாள் முதலியார். பாவலர் களுடன் விருந்தினரில்லத்தில் தங்கியிருந்தேன். திருமடத்துத் தலைவரைக் காணும் பொருட்டுப்புறப்பட்ட பாவலர்கள் என்னையும் அழைத்தனர். மடத்து நடைமுறைகளுக்கும் எனக்கும் ஒத்துவராது; அடிகள் கால்லில் வீழ்ந்து வணங்குதல் போன்ற முறைகளை நான் விரும்பாதவன். அதனால் நான் வாரேன் என மறுத்தேன். உடனிருந்த புலவர் ப.அரங்கசாமி என்பார் அதெல்லாம் அங்குக் கட்டாயமில்லை. நானும் அது செய்யேன். நீங்கள்துணிந்து வரலாம்’ என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றார். நானும் அவரை நம்பிச் சென்றேன். உள்ளே நுழைந்ததும் முதலில் அரங்சாமிதான் காலில் வீழ்ந்தார். பின்னர் மற்றையோர் வீழ்ந்தனர். எனக்கு அறத் தடுமாற்றமாகி