பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப்பறவையின் வாழ்க்கைப் பயணம் 283 சி.இலக்குவனார், மேடைக்கு ஒடோடி வந்து, சொல்ல வேண்டிய கருத்தைச் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டிய இடத்திற்றுணிந்து சொன்னிர்கள் என்று கையைப் பற்றிக் கொண்டு பாராட்டினார். கவியரங்கேறாக் கால்கள் 'அண்ணா விழா நடத்த எண்ணியுள்ளோம் கவிஞர் கண்ண தாசன் கலந்து கொள்கிறார். இடம் அண்ணாவின் கல்லறை. நீங்களும் கவிதை பாடவேண்டும்' என முரசொலியிலிருந்து அழைப்பு விடுத்தனர். நான் அண்ணாவிடம் அளவு கடந்த அன்பு வைத்திருப்பவன்; தமிழை உயிர் மூச்சாகக் கொண்டிருப்பவன். என்னைப் பழிப்பவனை - நான் ஏதும் நினைப்பதில்லை (தமிழே) உன்னைப் பழிப்பவனைப் - பகைபோல் உள்ளம் நினைக்குதம்மா என்றும் பாடியிருப்பவன். அதனால் நான் கவியரங்கிற்குச் செல்ல மறுத்து விட்டேன். நான் எழுதிய மறுமொழி. என் நெஞ்சில் நிலைத்திருக்கும் அண்ணாவையும் நான் வணங்கும் தமிழையும் இழித்தும் பழித்தும் பேசும் ஒருவர் கலந்து கொள்ளும் கவியரங்கில் ஏற என் ல்கள்.இ ா அண் பின்சர் ப் ே କାଶ சாக்கடைநீரைப்பாய்ச்சத்தொடங்கிவிட்டீர்களா? என்பதுதான். இம்மடல், கவி அரங்கு நிகழும் இடத்தை மாற்றியது. பிறி தோரிடத்தில் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. (அவர் அண்ணாவைப் பழித்ததையும் தமிழை இழித்ததையும் நாடு நன்கறியும்) என் மடல் சிலருக்கு வருத்தத்தைத் தரினும் என் உறுதிப் பாட்டை உணர்ந்து கருத்தை மாற்றிக் கொண்டனர். கடவுள் நம்பிக்கை திருவானைக்காவலில் மனிதன்' என்னும் தலைப்பில் ஒரு கவியரங்கம் நிகழ்ந்தது. தலைமைப் பொறுப்பு என்னுடையது அன்பர் பலர் பாடினர். அவருள் கவிஞர் அரு. சோமசுந்தரமும்