பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 29 | வி.கே. இராமச்சந்திரனாரைக் கொண்டு, என் பிணியை அகற்றி விட்டார். அன்று முதல் அப்பெருத்தகையைத் தந்தைக்கு நிகராகக் கருதி வருகிறேன். மருத்துவ மனையில் நான் இருக்கும் பொழுது என்துணைவியார் ஆண்மகவொன்றை ஈன்றெடுத்தனர். அம்மகவுக்கு அவர்தம் திருப்பெயரையே, சுப்பிரமணியம் என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்தேன். அது கடவுட் பெயராகவும் பிறமொழிச் சொல்லாகவும் இருந்துங்கூட, என்கொள்கைக்கு மாறாக இருந்துங்கூட என் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ள அப்பெயரைச் சூட்டி மகிழ்ந்தேன். என் நன்றியுணர்ச்சிக்குச் சான்றாக விளங்கிய அம்மகன் ஐந்தாண்டுகளே என்னுடன் வாழ்ந்தான். அதன் பின்னர் என்னைப் பிரிந்தேபோய் விட்டான். இவரைக் காண வருவோர் எவரேனும் கிடைத்தற்கரிய கனிகள் கொணர்ந்து கொடுப்பின் அவற்றை யெடுத்துக் கொண்டு, என்னிடம் ஒடி வந்து எனக்குத் தந்து விடுவார். என் உடல் நலத்துக்கேற்பச் சுவையான உணவுக்கு அவரே ஏற்பாடு செய்திருந்தார். வேளை தவறாமல் மருத்துவ மனைக்கு வந்து என் நலம் உசாவிச் செல்வார். அலுவல் காரணமாக ஒரு வேளை மறந்து விட்டால், தமது இல்லத்திலிருந்து தம் தம்பி மகனை என் பால் விடுத்துப் பார்த்து வரப் பணிப்பார். வாராமைக்கு வருந்தி மன்னிப்பு வேண்டுகோளும் விடுப்பார். என்னைக் காணவரும் போதெல்லாம் சிறிது பணத்தை என் சட்டைப்பையில் திணித்துச் செல்வார். மருத்துவமனையில் சுப்பிரமணியனார் காட்டிய பேரன்பு என்னைக் கவர்ந்து விட்டது. தாயினும், தந்தையினும் சாலப் பரிந்து பேரளி காட்டி என்னைப் பேணிக் காத்தமை இன்றும் என் மனத்துள் பசுமையாகவே இருக்கிறது. - 'எனக்கும் ஒர் அதியன் என்ற தலைப்பில் அவரைப் பற்றி நான் பாடிய பாடலில் வரும்