பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94. கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 'என்ன முடியரசன், வாழ்க்கையெல்லாம் எப்படியிருக்கிறது?’ என்று வினவினார் அடிகளார். ஒவ்வொரு மாதமும் பிடித்துத் தள்ள வேண்டியுளது. வாழ்க்கை இயல்பாக எளிதாக நகரவில்லை என்றேன். உடனே அடிகள், கண்கலங்கி விட்டார். தமது மடியிலிருந்த பணத்தை அப்படியே எடுத்து என் பையில் வைத்து விட்டார். இந்த ஒரு நிகழ்ச்சி மட்டுமா? இன்னும் எத்தனையோ முறை பணம் தந்து உதவி யிருக்கிறார். நான் வேண்டிக் கொள்ளாமலே குறிப்புணர்ந்து சூழ்நிலையறிந்து உதவிகள் பல செய்துள்ளார். என் மகன் குமணன் இன்று பணியில் இருக்கிறான் என்றால் அவர், தாமே எடுத்துக் கொண்ட முயற்சிதான் காரணம். == 1990 மார்ச்சு மாதம் 21-ஆம் நாள் பக்கவாத நோய் என்னைத் தாக்கியது. மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டேன். இதனை யறிந்து அடிகளார் மனமுருகித் தம் செயலரிடம் பணம் தந்து விட்டார். மேலும் பிள்ளையார்பட்டி மருத்துவரையும் என் பால் விடுத்து மருத்துவமும் பார்க்கச் செய்தார். அவர் தம் அருள் உள்ளத்தில் எனக்கும் ஒர் இடம் உண்டு என எண்ணி யெண்ணிப் பெருமிதம் அடைவதுண்டு. தவத்திரு அடிகளாரை உள்ளுதொறும், உள்ளுதொறும் நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்' என்ற சுந்தரர் பாடல் வரிதான் என் மனத்துள் தோன்றிக் கூத்திடுகிறது. பார்வதி நடராசன் பாரதியைப் புரந்த வள்ளலும் பாவேந்தர் பாரதிதாசனுக்கு உற்ற துணைவரும் ஆன சீர்த்திருத்தச் செம்மல் கானாடுகாத்தான் வை. சு.சண்முகனார் தம் இன்ப மாளிகைக்கு நான் அடிக்கடி காரைக்குடியிலிருந்து செல்வதுண்டு. என்பால் அவர் உரிமை யுணர்வுடன் பழகுவார். 'உனக்கு எதுவும் தேவையென்றால், காரைக்குடியிலுள்ள அக்காவிடம் (பார்வதி நடராசன்) சொல்' என்று அடிக்கடி என்னிடம் சொல்வதுண்டு. பார்வதி நடராசன், சண்முகனார் தம் திருமகள் ஆவார். பாரதியார், திரு.வி.க. போன்ற பெருமக்களிடத்தில் ஈடுபாடு கொண்டவர். அவர்தம் எழுத்தெல்லாம்.அம்மையார்தம் நெஞ்சத்தில்