பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 தமிழரசுக்கழக மாநாடு சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானகிராமணி அவர்கள் தமிழரசுக் கழகம்’ என்னும் பெயரில் இயக்கமொன்று நடத்தி வந்தார். அதன் மாநாடு சென்னையில் நிகழ்ந்தது. மாநாட்டுக்குத் திரு.வி.க.வும் அழைக்கப்பட்டிருந்தார். மாநாட்டில் எவரோ ஒருவர் சில வினாச்சீட்டுகள் எழுதிக் கொடுத்தார். விடை வருமென ஆவலுடன் இருந்தார். ஆனால் மாறாகத் தடை வந்தது; அடியும் வந்தது, வெகுண்டெழுந்த தமிழரசுக் கழகத் தொண்டர்கள்.அவரைப் பிழிந்தெடுத்து விட்டனர். குருதி சொட்டச் சொட்ட வெளியில் வந்து விழுந்தார் அவர். திரு.வி.க. தமக்கே உரிய முறையில் அழகு தமிழிற் பேசினார் அவர் பேச்சின் முடிவில் முதலில் தமிழ் நாடு; அடுத்தது திராவிட நாடு; அதன் பின் இந்தியா, இறுதியில் உலகம்' என்ற கோட்பாடு வளர்க" எனப் பேசி முடித்தார். சிலம்புச் செல்வர் உரையாற்றும் பொழுது, திரு.வி.க அவர்கள் திருவாசகத் தேனில் மூழ்கிக் கிடக்கும் ஒரு வண்டு. அத்தேனை மிகுதியாகக் குடித்து விட்டமையால் அந்த வண்டு மதி மயங்கிப் பேசுகிறது என நயமாகத் தாக்கி விட்டார். இந்தி எதிர்ப்பு மாநாடு பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடொன்று கூட்டினார். பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர். கருப்புச் சட்டைக்குரிய பெரியார், காவியுடை யுடுத்த மறைமலையடிகளார்க்குத் தலைமைப் பொறுப்பையளித்தார். திரு.வி.க. பாரதிதாசன், அண்ணா. ம.பொ.சி. நாரணதுரைக்கண்ணன் முதலானோர் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டிருந்தனர். திரு.வி.க. அவர்கள் பேசும் பொழுது, தமிழ் அமைதி தரும் மொழி. இந்தி கொலை வெறி பிடித்த மொழி, காந்தியடிகள் வடநாட்டிற் பிறந்தமையாற்றான் கொலை செய்யப்பட்டார். அவர் தமிழ் நாட்டிற் பிறந்திருப்பின் அந்நிலைக்கு ஆளாகியிரார் என்பது என்துணிபு’ என்ற கருத்தை வெளியிட்டார். ம.பொ.சி அவர்கள் உரை நிகழ்த்துங்கால் ஒர் அருமையான கருத்தை உண்மைத் தமிழன் சொல்ல வேண்டிய கருத்தை எடுத்து