பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 கவியரசர் முடியரசன் படைப்புகள்-8 வழியிற் றமக்குள் வாயுட் பேசிய மொழியென் செவியில் முழுதும் விழவிலை: செவ்வேள் குன்றத் திசையிற் செல்ல இவ்வழிச் செலல்.ஏன்? எனயான் வினவ, "வாய்திற வாது வருக எனலும், ஒய்த லின்றி உளந்துடிப் பேறப் போயொரு நெறியிற் புகுங்கால் அவ்வுழிக் காவலர் வருதல் கண்டுவாய் திறந்துயான் ஒவென்றலற ... மாதேவி : ... ஊர்காப்பாளனோ ஆங்கு வந்தவன்? ... குழலி : . . அறியேன், கைவேல் தாங்கி வந்தவர் தடுக்க வம்பலர் வாள்கொடு மோத வாரும் மேலும் நீள்பொழு துராய்ந்து வாள்கீழ் வீழ்ந்தது வீழ்ந்த வாளை விரைந்தெடுத் தியானும் சூழ்ந்து தாக்க, ... பாண்டியன் : ... சொல்சொல் மகளே குழலி அவ்வுழைப் பரிமிசை அண்ணன் வரலும் பாண்டியன் எவ்வணம் கடம்பன் அவ்வுழை வந்தனன்? கடம்பன் இல்லினும் புகலும் ஏவலர் கூற வில்லிற் கணையென விரையரி யேறித் திருநகர் யாண்டுந் தேடி வருங்கால் முருகன் குன்றின் அருகிற் கண்டேன்; குழலி அண்ணன் வருதல் அறிந்ததும் வம்பலர் கண்ணிமை மூடுமுன் கடுகி ஓடினர்; பாண்டியன் : (கடம்பனை நோக்கி) கன்னி யிவட்குக் கடிமணங் காணா தின்னும் இருத்தி இயற்றுதி விரைவில்: